• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-06 00:06:55    
பாலைவனச் சோலை

cri

சிங்கியாங்கில் பசுமையை அதிகரிக்க, உள்ளூர் அரசும் பொது மக்களும் கடந்த பல்லாண்டுகளாக அயராது பாடுபட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு வசந்த காலத்திலும் நிகழும் மரம்நடுதல் மற்றும் காடு வளர்த்தல் நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். தாக்லாமான் பாலைவனத்தின் விளிம்பிலுள்ள குர்லே நகரம் சிங்கியாங்கின் இரண்டாவது பெரிய நகராகும். 5 ஆண்டுகளுக்கு முன், அங்கு மணல் அவ்வப்போது நிகழ்ந்துண்டு. உயிரின வாழ்க்கை சூழல் மிகவும் மோசமானது. சூழலை மேம்படுத்தும் வகையில், குர்லே நகராட்சியின் ஏற்பாட்டில், நகரவாசிகள் அனைவரும் புறநகரிலான மலட்டு மலைகளில் மரம் நட்டு வருவதினால், காற்றையும் மணலையும் தடுத்து நிறுத்த வல்ல வனக்காப்பு நாடா பலவும் உருவாயிற்று.

பசுமைமயமாக்கத்தின் மீது சிங்கியாங் மக்கள் ஆழ்ந்த உணர்வு கொண்டுள்ளனர். பொது மக்களின் விருப்பம் போல, வன மூலவளததைப் பாதுகாப்பது, மணல் தடுத்து கட்டுப்படுத்துவது, உயிரின வாழ்க்கை சூழலை மேம்படுத்துவது ஆகியவற்றில் உள்ளூர் அரசாங்கம் முக்கிய பணியாக்கியுள்ளது. 1997ம் ஆண்டு, வனத்தொழிலை வளர்ப்பதில், உயிரின வாழ்க்கைச்சூழலின் பயனை முதலிடத்தில் வைக்க வேண்டும் என்ற கோட்பாட்டினை, சிங்கியாங் வைத்துள்ளது. சிங்கியாங் வனத்தொழில் பணியகத்தின் துணைத் தலைவர் லீ சியேங் ரி எடுத்துக்கூறியதாவது:

"வனத்தொழில், உயிரின வாழ்க்கைச்சூழல் உருவாக்கத்தின் முதுகெலும்பாக, சிங்கியாங்கின் தேசியப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகுநிலையும் பங்கும் உடையது. பொருளாதார வளர்ச்சிக்கும் பல்வேறு தேசிய இன மக்களின் வாழ்க்கைக்கும் அது நிதானமான உயிரின வாழ்க்கைச் சூழல் உத்தரவாதம் அளித்துள்ளது. சிங்கியாங்கில், வனத்தொழிலை வளர்க்க வேண்டுமாயின், "உயிரின வாழ்க்கைச்சூழல் பயன், முதன்மை" என்ற வழிகாட்டல் கோட்பாட்டில் ஊன்றி நிற்க வேண்டும்" என்றார் அவர்.


1  2