• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-06 16:35:49    
பொன் நிற குரங்கைப் பாரர்க்கப்போவோம்

cri

சீனாவில், மக்கள் நன்கு அறிந்த அளவில், பேருருவ பண்டா, ZHU HUAN என்னும் பறவை, ZHONG HUA XUN என்ற மீன் உள்ளிட்ட 100க்கும் அதிகமான அரிய விலங்குகள் உள்ளன. ஆனால், மாந்த குல சமூகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டின் துறைகள் இடைவிடாமல் விரிவடைந்து வருவதுடன், அரிய விலங்குகள் வாழும் மண்டலங்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன. தென்மேற்கு சீனாவின் GUI ZHOU மாநிலத்து FAN JING SHAN மலையில் அமைந்துள்ள தேசிய நிலை இயர்கைப் புகலிடம், தற்போது, பொன் நிற குரங்குகள் வாழும் ஒரே ஒரு இடமாக விளங்குகிறது.

GUI ZHOU மாநிலத்தின் கிழக்கு பகுதியிலுள்ள FAN JING SHAN மலையில், கன்னிக்காடு ஒன்று உள்ளது. 1986ம் ஆண்டு, இம்மலை, ஐ.நாவினால், மாந்த மற்றும் இயிரின இயற்கை புகலிட வலைப்பின்னல் என அறிவிக்கப்பட்டுள்ளது. புவி மற்றும் மாந்த குல பெட்டகம் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்.

பொன் நிற குரங்குகள், முக்கியமாக தென்மேற்கு சீனாவின் SI CHUAN,YUN NAN,GUI ZHOU ஆகிய மூன்று மாநிலங்களில் பரவலாக வாழ்கின்றன. அவை, GUI ZHOU பொன் நிற குரங்கு, SI CHUAN பொன் நிற குரங்கு, YUN NAN பொன் நிற குரங்கு என மூவ்வகைப்படுகின்றன. அவற்றில், GUI ZHOU பொன் நிற குரங்குகளின் எண்ணிக்கை, மிகவும் குறைவு. அவை, ஏறக்குறைய 700 மட்டுமே. குறைவான பரப்பில் சிதறி வாழும் இவ்வகை குரங்குகள் மரபற்றப் போகும் நிலையில் உள்ளன.

இதர குரங்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், GUI ZHOU குரங்கு, பார்ப்பதற்கு மிகவும் எழிலானது. அதன் மார்பிலும் நான்கு கால்களிலும் உள்ள நீளமான பொன்நிற ரோமம், சூரிய ஒளியில் மினுமினுக்கின்றது. அதன் முகம், நீல நிறத்தில் காட்சியளிக்கன்றது. முதுகு ஈய நிறமுடையது. இரு தோள்களுக்கிடையில் வெள்ளை நிற வரி ஒன்று காணப்படுகின்றது. அதன் மூக்கு, மேல் நோக்கி உள்ளது. நீண்ட வாலும் உள்ளது.

இயற்கை புகலிட நிர்வாக அலுவலகத்தின் பொறியியலாளர் SUN DUN YUAN இம்மாநிலத்தில் பொன் நிற குரங்கைக் கண்டுபிடித்தமை பற்றி எமது செய்திமுகவரிகளிடம் எடுத்துக்கூறினார்.

1  2