• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-06 16:35:49    
பொன் நிற குரங்கைப் பாரர்க்கப்போவோம்

cri

1903ம் ஆண்டு பிரிட்டனின் விலங்கியல் துறை வல்லுநர் டோம்ஸ், GUI ZHOU மாநிலத்தின் வடபகுதியில் ஏற்கனவே அறிமுகமான குரங்கு இனங்களிலிருந்து முற்றிலும் வேறுப்பட்ட பொன் நிற மயிருடன் கூடிய குரங்கு தோல் ஒன்றை பெற்றார். GUI ZHOU வில் இதனை கண்டுபிடித்ததினால், இக்குரங்குக்கு, GUI ZHOU பொன் நிற குரங்கு என டோம்ஸ் பெயர் சூட்டினார். இது விரையிலும் இப்பெயர் தொடர்கிறது.

அப்போது, டோம்ஸ் இத்தகைய குரங்கு தோலைக் கண்டுபிடித்தாலும், இது இன்னமும் வாழ்கின்றதா? அதன் வாழ்விடம் எங்கோ இருக்கின்றது? வாழும் சுற்றுச் சூழல் எப்படி இருக்கிறது என்பன பற்றி, அவருக்கு ஏதும் தெரியாது. 1964ம் ஆண்டு வரையில், சீன அறிவியலாளர்களின் கள ஆய்வுக் குழு, FAN JING SHAN மலையில், GUI ZHOU பொன் நிற குரங்குகளைப் பார்த்த அளவில், இக்குரங்கு வாழ்கின்றது என்பதை மெய்ப்பித்தனர்.

இக்குரங்குகளையும் இம்மலையில் வாழும் இதர அரிய விலங்குகள் மற்றும் தாவரங்களையும் மேலும் சிறப்புற பாதுகாக்கும் வகையில், 1979ம் ஆண்டில், சீன அரசின் ஆணைக்கிணங்க, இம்மலை, தேசிய நிலை இயற்கை புகலிடமாக மாறியது. இக்குரங்குகளின் பழக்கம், பரவல், மற்றும் எண்ணிக்கையை அறிந்து கொள்வதே, அறிவியல் ஆய்வாளர்களின் முதல் நோக்கமாகும். இதற்காக, பணியாளர்கள் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, முழு புகலிடத்தையும் வலைப்பின்னல் வடிவில் வரையறுத்தனர். மாந்த நடமாட்டம் இல்லாத கன்னிக்காட்டில் மிகவும் கடினமான முறையில் குரங்குகள் செல்லும் இடங்களுக்குச் சென்று கூடாரங்களை அமைத்தனர். எட்டு ஆண்டுகளில், அவர்கள், இக்குரங்குகளின் எண்ணிக்கை, பழக்கவழக்கம் முதலியவற்றை முழுமையாக அறிந்தனர்.

இதர விலங்குகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது, GUI ZHOU பொன் நிற குரங்கு, மரபற்றுப் போகும் நிலையில், இருப்பதற்குக் காரணம் என்ன? இயற்கை புகலிடப் பணியாளர்களின் கூற்று படி, இதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன. முதல் காரணம், இக்குரங்கின் இனப்பெருக்கத்திறன் மந்தமாக உள்ளமையாகும். பெண் குரங்கு கர்ப்பம் கொண்டது முதல், குட்டி ஈனும் வரை பொதுவாக 5-6 திங்கள் காலம் தேவைப்படுகின்றது. தவிர, அது, ஆண்டுதோறும் குட்டி ஈனுவது மில்லை. குரங்கு குட்டிகளின் வாழும் விழுக்காடு குறைவு. இரண்டாவது காரணம், இத்தகைய குரங்கு, உயர்வான வாழ்க்கை சூழலில் வாழ வேண்டும் என்பதாகும். கடந்த பல்லாண்டுகால பராமரிப்பு மூலம், GUI ZHOU பொன் நிற குரங்குகளின் எண்ணிக்கை, தற்போது ஓரளவு அதிகரித்துள்ளது. ஆனால், அதன் இனப்பெருக்கம், இன்னமும் மந்தமாகவே உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியின் மூலம், FAN JING SHAN மலையின் உயிரின வாழ்க்கை சூழல், நன்கு மேம்பட்டுள்ளது. இங்கு, தற்போது 1800 தாவர இனங்களும் 801 விலங்கினங்களும் வாழ்கின்றன. அவற்றில் பல, அரசின் பாதுகாப்பில் உள்ள அரிய இனங்களாகும்.


1  2