• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-07 00:04:02    
சீனாவின் தூய்மைகேடற்ற தேயிலை தொழில்

cri

தேயிலை தொழில் துறையை முறைமைப்படுத்தும் வகையில் சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தூய்மையான உற்பத்தி செயல்முறை பற்றிய சட்டத்தில், வேதியியல் உரம், கிருமி நாசினி ஆகியவற்றுக்கான அளவுக்கு மீறிய பயன்பாட்டைத் தடுக்கும் சிறப்பு விதிமுறைகள் உள்ளன. தேயிலையின் தூய்மைகேட்டு அளவை பரிசோதிக்கும் திட்டப்பணிகள் பலவற்றை சீனாவின் தொடர்புடைய வாரியம் வகுத்துள்ளது. பல்வேறு பரிசோதனைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேயிலை மட்டுமே சந்தையில் விற்கப்படலாம்.

Long Jing

தவிர, சில புகழ் பெற்ற தேயிலை வகைகள் விளையும் பிரதேசத்தைப் பாதுகாக்கும் கொள்கை சீனாவில் நடைமுறைக்கு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக, சீனாவின் சே ஜியாங் மாநிலத்தில் அமைந்துள்ள மேற்கு ஏரியின் அருகில் விளையும் லோங் ஜிங் தேயிலை பாதுகாக்கப்பட்ட தேயிலை வகைகளில் ஒன்றாகும். இது பற்றி குறிப்பிடுகையில், மேற்கு ஏரி லோங் ஜிங் தேயிலை கூட்டு நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் தலைவர் சி கோ வெய் கூறியதாவது—

"இக்கொள்கைக்கு சில காரணங்கள் உண்டு. ஒன்று, மேற்கு ஏரி லோங் ஜிங் தேயிலையின் விளையும் இடம் உறுதிப்படுத்தப்படுகிறது. அதன் பரப்பளவு 168 சதுர கிலோமீட்டராகும். இவ்வரம்புக்குள் விளையும் தேயிலை தான் மேற்கு ஏரி லோங் ஜிங் தேயிலை என அழைக்கப்பட முடியும். இரண்டு, லோங் ஜிங் தேயிலையின் ஆண்டு உற்பத்தி அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஹெக்டர் பரப்பில், 375 கிலோகிராம் தேயிலை மட்டுமே விளைவிக்க முடியும். மூன்று, சிறப்பு கடை உருவாக்கப்பட வேண்டும். இதனால் பொது மக்கள் உண்மையான மேற்கு ஏரி லோங் ஜிங் தேயிலையை வாங்க முடியும்" என்றார் அவர்.

Wu Long

கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் தரமான தேயிலை வெளிநாடுகளில் விற்பது அதிகரித்து வருகிறது. 2003ஆம் ஆண்டில் சீனாவின் தேயிலை ஏற்றுமதி அளவு 2 லட்சம் 60 ஆயிரம் டன் ஆகும். இது உலகில் 2வது இடம் வகிக்கிறது. பூ ஏர் தேயிலை தென் கிழக்காசியாவிலும் ஐரோப்பாவிலும் வரவேற்பு பெறுகிறது. லிபியா, மொராக்கோ முதலிய நாடுகள், நீண்டகாலமாக சீனாவிலிருந்து பச்சை தேயிலை இறக்குமதி செய்து வருகின்றன. உலோங் தேயிலை ஜப்பான் முதலிய நாடுகளில் வரவேற்பு பெறுகிறது. தற்போது, இந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத நுகர்வுப் பொருளாக சீனாவின் தேயிலை மாறிவிட்டது.


1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040