
விகுர் இனப் பழ விவசாயி ஐ சாங். தாரிப், தன் வருமானம் பற்றிக் கூறியதாவது:
"என குடும்பம், அரை ஹெக்டர் நிலத்தில் ஆப்ரிகாட் பழ மரம் நட்டோம். இவ்வாண்டு இம்மரங்களில் 50 விழுக்காட்டு மரங்கள், பழங்களைத் தரும், இதனால், சுமார் இருபதாயிரம் யுவான் வருமானம் பெற்றோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இம்மரங்கள் அனைத்தும் பலன் தந்தால், என குடும்பத்தின் ஆண்டு வருமானம், 40 ஆயிரம் யுவானை எட்டலாம்." என்றார் அவர்.

தற்போது, சிங்கியாங்கில், பழ மரம் பயிரிடும் பரப்பு, 3 லட்சம் ஹெக்டரை எட்டியுள்ளது. சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசத்தின் கட்சி கிளை செயலாளர் வாங் லேங் சுயே, பேசுகையில், இனி, பெருமளவில் பழமரம் பயிரிடுமாறு விவசாயிகளுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளிக்கப்படும். அத்துடன், தாரிம் வடிநிலத்தைச் சுற்றியுள்ள, தரமான தனிச்சிறப்பியல்புடைய வனப் பிரதேசத்துப் பழத்தொழில் மண்டலம் உருவாக்கப்படவுள்ளது என்று கூறினார். அவர் கூறியதாவது:
"5 ஆண்டுக்கால முயற்சி மூலம், தென் சிங்கியாங்கின் தாரிம் வடிநிலத்தைச்சுற்றியுள்ள இடத்தில், சுமார் பத்து லட்சம் ஹெக்டர் பரப்புடைய இத்தகைய பழ உற்பத்தி தொழில் மண்டலத்தை உருவாக்கவுள்ளோம். பழங்களின் உற்பத்தி அளவு, இரண்டு கோடி டன்னைத் தாண்டும்" என்றார் அவர். 1 2
|