வெள்ளை அறிக்கை என்ன குறிக்கின்றது
cri
சீனா அடிக்கடி பாதுகாப்பு வெள்ளை அறிக்கையையும் தூதாண்மை வெள்ளை அறிக்கையையும் வெளியிடுகின்றது. வெள்ளை அறிக்கை என்றால் என்ன? அதற்கும் நீல அறிக்கைக்குமிடையில் வித்தியாசம் என்ன? என்று சீனாவின் சாந்சி மாநிலத்தின் நேயர் லியோ கேட்கிறார். ஒரு நாட்டு அரசு அல்லது நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக முக்கிய ஆவணம் அல்லது அறிக்கை வெளியிடும் போது வெவேறான நிறங்களில் உறை பயன்படுத்தப்படுவது வழக்கம். வெள்ளை நிற உறை இருந்தால் இந்த அறிக்கை வெள்ளை அறிக்கையாக அழைக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் அரசு நீல நிறத்தில் அறிக்கை வெளியிடும் போது இந்த அறிக்கை அறிக்கையாக குறிப்பிடப்படுகின்றது. ஸ்பெயின் அரசு சிவப்பு நிறத்தில் அறிக்கை வெளியிடும் போது இந்த அறிக்கை சிவப்பு அறிக்கையாகவும், பிரெஞ்சு அரசு மஞ்சல் நிற உறையில் அறிக்கை வெளியிடும் போது இந்த அறிக்கை மஞ்சள் அறிக்கையாகவும், இத்தாலி அரசு பச்சை நிறத்தில் வெளியிடும் அறிக்கை பச்சை அறிக்கையாகவும் அழைக்கப்படுகின்றன. 1 2
|
|