• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-17 11:22:48    
வெள்ளை அறிக்கை என்ன குறிக்கின்றது

cri
வெள்ளை அறிக்கை அல்லது நீல அறிக்கை வெளியிடும் நாடுகளின் எண்ணிக்கை உலகத்தில் மிக அதிகமானவை. குறிப்பாக வெள்ளை அறிக்கை சர்வதேசரீதியில் அதிகாரபூர்வ ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கை சில சமயங்களில் ஒரு நூலாகவும் சில சமயங்களில் ஒரு கட்டுரையாகவும் இருக்கலாம்.

அதிகாரப்பூர்வ ஆவணம் என்ற முறையில் வெள்ளை அறிக்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது. இதன் அம்சங்கள் உண்மையானவையாக கருதப்படுகின்றன. இதில் நிலைப்பாடு தெளிவாக கூறப்பட வேண்டும். துறைகள் ஒழுங்கான முறையில் இருக்க வேண்டும். சொற்கள் தெளிவாகவும் இருக்க வேண்டும். இதில் கலை கலை நயம் தேவையில்லை. சில சமயத்தில் வெள்ளை அறிக்கை காலக்கிரமப்படி வெளியிடப்படலாம். எடுத்துக்காட்டாக சீனப் பாதுகாப்பு வெள்ளை அறிக்கை 1998ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. சில சமயத்தில் குறிப்பிட்ட சூழ்நிலையில் சிறப்பாக வெளியிடப்படுகின்றது. எடுத்துக்காட்டாக மேலை நாடுகள் சீன மனித உரிமைக் கொள்கைக்கு எதிரான தாக்குதலை குறை கூறும் வகையில் சீன அரசு அடுத்தடுத்து சீன மனித உரிமை நிலைமை பற்றி தொடர்ந்து வெள்ளை அறிக்கைகள் வெளியிட்டது. தவிர, அதிகார பூர்வமான ஆண்டு அறிக்கை, பதிவேடுகள், நிலைமை தொகுப்பு ஆகியவற்றை முன்பு வெளியிடப்படும் போது அதன் அதிகார பெருமை செல்வாக்கு அதிகரிக்கும் போது அவை வெள்ளை அறிக்கையாக அழைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் கொள்கை ஆய்வகம் தொகுத்து வெளியிட்ட சீனாவின் ஓராண்டு வெளிவிவகார பணி மற்றும் வெளிநாட்டுறவு நிலைமை ஆகியவை இடம் பெறும் "சீனத் தூதாண்மை"எனும் நூல் ஆண்டுக்கு ஒரு முறை வெளியிடப்படுகின்றது. 2004ம் ஆண்டில் இந்த நூல் வெள்ளை அறிக்கையாக மாற்றப்பட்டது. சீனாவில் பல இடங்கள், வாரியங்கள், துறைகள் ஆகியவை அடுத்தது நீல நூல்களை வெளியிட்டுள்ளன. நிலைமை, பகுதாய்வு, சாதனை ஆகியவையும். கொள்கை யோசனைகளும் இந்த நூல்களில் முக்கியமாக எடுத்துக் கூறப்படுகின்றன. இவற்றில் சீன சமூக அறிவியல் கழகம் 1991ல் முதன் முதலில் ஆண்டுக்கான சீன பொருளாதார நீல நூலை வெளியிடுவது இதில் காணப்படுகின்றது.
1  2