• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-18 15:14:49    
புத்த மதகோயில் மதகுரு வாழ்க்கை

cri

Zhaibung கோயில்

திபெத், ஒரு புனிதமான பிரதேசம். திபெத்தில் வாழும் பெரும்பாலான திபெத் இன மக்கள், திபெத் மரபுவழி புத்த மத நம்பிக்கை உடையவர்கள். கோயிலுக்குப் போய், மதகுருவாயிருப்பது, புத்தமதத்தின் மீது அவர்களுக்கு உள்ள மிகுந்த பற்றைக் காட்டுகிறது.

இவ்வாண்டு, 14 வயதான Luosang Cairang, அண்மையில் தான் மதகுருவாகியுள்ளார். லாசா நகரின் புற நகரில் உள்ள Zhaibung கோயிலுக்கு முன்னால் செய்தியாளர் அவரைச் சந்தித்தார். அவர் தம் சகாக்களுடன் இணைந்து, வெய்யில் காய்ந்து கொண்டே, வந்து போகும் பயணிகளைப் பார்த்துக்கொள்கின்றார். எமது செய்தியாளர், அவருடன், அவரது கோயில் வாழ்க்கை பற்றி உரையாடினார்.

தமது கோயில் வாழ்க்கை, புள்ளியில் கல்வி பயிலுவது போன்றது. நாள்தோறும் பாடம் சொல்லிக்கொடுக்கப்படும். திபெத் மொழியையும் எளிதான திருமறைகளையும் கற்றுக்கொள்வதாகவும், ஆசிரியர்கள் தமக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதோடு, தம்மை கவனிப்பதாகவும் Luosang Cairang தெரிவித்தார். வயது குறைவு என்பதால், அவருக்கு படிப்புச் சுமை குறைவு. படிப்பு தவிர, அதிகமான நடவடிக்கைகளில் அவர் கலந்து கொள்கின்றார். எடுத்துக்காட்டாக, இதர மதகுருமாருடன் சேர்ந்து கால்பந்து, கூடை பந்து ஆகியவற்றை விளையாடலாம். இலக்கிய நூல்களையும் படிக்கலாம். இவை பற்றிக் குறிப்பிட்ட போது, அவர் உற்சாகமிகுந்து சரளமாகக் கூறியதாவது:

"எங்களுக்கு வானொலி பெட்டி உண்டு. திபெத் மொழி நிகழ்ச்சிகளையும் ஹான் இன மொழி நிகழ்ச்சிகளையும் கேட்கலாம். அவற்றில் எனக்கு மிகப் பிரியம். தொடர் நாடகங்களாகும். நான் இங்கு வந்து மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன. தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் படிக்க வேண்டும்" என்றார் அவர்.

1  2