
இந்த இளம் மதகுரு, கோயிலை, உறைவிட வசதியுடைய பள்ளியாகக் கருதுகின்றார் என்பதை, அவருடன் நடத்திய கலந்துரையாடல் இருந்து உரைலாம். திபெத் இனத்தவரின் கருத்தில் இது தவறு அல்ல. ஏனெனில், திபெத்தின் கோயில்கள், பண்டைக்காலம் தொட்டு, பண்பாட்டைப் பரப்பும் இடமாகும். முன்பு, திபெத் இனத்தவர், கல்வி பயில வேண்டுமாயின் கோயிலுக்குப் போய், மதகுருவாக இருக்க வேண்டும். தற்போது, திபெத்தில் பொது மக்களிடையே கல்வி, மிகவும் பரவியுள்ளது. இருப்பினும், திபெத் மரபு வழி பண்பாட்டு அறிவு தொடர்பான ஆய்வு தரவுகள், கோயிலில் மிக பத்திரமாக காக்கப்பட்டுள்ளன.

திபெத் மரபு வழி புத்தமத கோயிலில், பொதுவாகக்கூறின், புத்தமத தத்துவம், வானியல், இசை மற்றும் ஓவிய கலை, திபெத்தின் மருந்து முதலிய பாடங்கள் நடத்தப்படுகின்றன. கோயிலில் படிக்கும் குருமார்கள், தத்தமது விருப்பப்படி பாடங்களைத் தேர்ந்தெடுக்கலாம். படிப்பு முடிந்த பின் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற பின்னரே பட்டதாரியாக இருக்க முடியும்.
கோயிலில், இன்றியமையாத திருமறை பாடங்களை தவிர, சொந்த விருப்பத்திறகிணங்க, குருமார்கள் இதர பாடங்களைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம். தவிரவும், தமது ஆசிரியரையும் தெரிவு செய்ய வேண்டும். கோயிலிலுள்ள ஆசிரியர்கள் அறிவுமிக்க மூத்த குருமார்கள், பாடம் சொல்லிக்கொடுப்பது தவிர, அவர்கள் இளம் குருமார்களின் ஒழுக்க நெறிக்கு வழிகாட்டியாகவும் விளங்குகின்றனர். 1 2
|