• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-22 16:03:04    
சீனா உருவாக்கிய பல தரப்பு அயலுறவு

cri

கடந்த சில ஆண்டுகளாக சீனா சர்வதேச சமூகத்துடன் மேலும் நெருக்கமாக இணைந்து விரிவான அளவில் செயல்பட்டு வருகின்றது. முன்பை விட அதிக தற்சார்புடன் சீனா அயல் விவகாரங்களில் ஈடுபடும் நிலைமை காணப்படுள்ளது. 21ம் நூற்றாண்டில் நுழைந்த பின் பல தரப்பு தூதாண்மை துறையில் சீனா சுறுசுறுப்பாக பங்கு எடுத்துள்ளது. உலக வர்த்தக அமைப்பில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்த பிறகு சீனா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பையும் போ ஓ ஆசிய மன்றத்தையும் உற்சாகத்துடன் ஏற்படுத்தியது. அத்துடன் ஆசிய பசிப்பிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் 9வது அதிகாரப்பூர்வமற்ற மாநாடு, கொரிய தீபகற்ப அணூ ஆயுத பிரச்சினை பற்றிய ஆறு தரப்பு பேச்சுவார்த்தை ஆகியவை உள்ளிட்ட செல்வாக்கு மிக்க சர்வதேச கூட்டங்களும் சீனாவின் தலைமையில் நடைபெற்றன.

சொந்த கருத்தை விளக்கி, நாட்டின் நலனைப் பேணிக்காத்து சாதனைகளை எடுத்துச் காட்டுவதில் பலதரப்பு தூதாண்மை முயற்சி சீனாவுக்கு சிறந்த வாய்யப்பினை வழங்கியுள்ளது. இருதரப்பு தூதாண்மையுடன் ஒப்பிட்டு பார்த்தால், பரந்த அளவில், பல தரப்பு பங்கு எடுப்பது, நிகழ்ச்சிகளை பல வகை வடிவங்களில் மேற்கொள்வது போன்ற தனிச்சிறப்புக்கள் பல தரப்பு அயல் உறவில் காணப்படுகின்றன. சர்வதேச சமூகத்துக்கு தனது வெளியுறவுக் கொள்கையையும் சர்வதேச உறவைக் கையாள்வதில் தனது கொள்கையளவிலான நிலைப்பாட்டையும் சீனா மேலும் விளக்கி கூறுவதற்கு இவை துணை புரியும்.

வளர்ந்துள்ள சீனா உலக அமைதிக்கும் ஒருமைப்பாட்டுக்கும் குறிப்பாக ஆசிய பிசிப்பிக் வட்டாரத்தின் அமைதிக்கு மேலும் ஆக்கப்பூர்வ பங்கு ஆற்ற முடியும் என்பதை இந்த வழியாக சீனா உலகத்திற்கு காட்டியுள்ளது. தென் கிழக்காசிய நாடுகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பு வட்டார சங்கங்களின் நடவடிக்கைகளில் கலந்து கொள்வதன் மூலம், சீனா பின்பற்றியுள்ள, அண்டை நாடுகளுடன் சுமுகமாக இருப்பதென்ற கொள்கையை மற்ற நாடுகள் புரிந்து கொண்ட்டுள்ளன. ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கம் அதிகரித்துள்ளது. சீனாவின் அச்சுறுத்தல் என்ற வாதத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறைந்துள்ளது.

பல தரப்பு தூதாண்மை நடவடிக்கை சீனாவின் வெளிப்பாட்டை உயர்த்தியுள்ளது. சமாதானத்துடன் சீனா வளர்வதற்கும் பொருளாதார கட்டுமானத்துக்கும் சீரான அமைதியான சர்வதேச சூழலை உருவாக்கியுள்ளது.
தற்போது இருக்கின்ற உலக அரசியல் மற்றும் பொருளாதார முறைமை 2வது உலக போர் முடிந்ததும் வளர்ந்த நாடுகளின் தலைமையில் நிறுவப்பட்டது. இதில் சமத்துவமற்ற உறவு இருந்தது. சர்வதேச முறைமையில் சீனா உற்சாகத்துடன் பங்கேற்று ஆக்கப்பூர்வ மனப்பான்மையுடன் இந்தக் குறையை சீர்செய்து, புதிய சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார முறைமையை நிறுவிட ஆக்கப்பூர்வமான பங்கு ஆற்றியுள்ளது.
1  2