பல தரப்பு தூதாண்மை உறவு என்ற அரங்கை கொண்டு பல துருவ உலகம் சர்வதேச உறவில் ஜனநாயகமாகம், முன்மாதிரி வளர்ச்சி என்பது போன்ற கருத்துக்களை சீனா முன்வைத்தது. சீனா தெரிவித்த பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் ஜனநாயக கண்ணோட்டத்தை மேன்மேலும் அதிகமான நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஐ.நாவின் சீர்திருத்த பிரச்சினையில் சீனா வளரும் நாடுகளின் பிரதிநிதியாக செயல்படுவது மேலும் பரந்தளவில் பாராட்டப்பட்டுள்ளது.

சர்வதேச முறைமையில் சீனா தனது தகுநிலையை புலப்படுத்தியுள்ளது. உலகளாவிய கண்ணோட்டத்துடன் சீனா தனது புதிய வெளிவியுறவு கொள்கையை நடைமுறைப் படுத்துவதில் பல தரப்பு தூதாண்மை சீனாவுக்கு உறு துணை புரியும்.
வளர்ச்சி பலதுருவ உலகம் பொருளாதார உலகமயமாக்கம் ஆகியன பல தரப்பு தூதாண்மையின் திட்டவட்டமான வெளிப்பாடாகும். இத்தகைய தூதாண்மை மற்றும் ஒத்துழைப்பு மூலம் தான், மக்கள் தொகை பெருக்கம், மூல வள மற்றும் எரியாற்றல் பற்றாக்குறை, தலைவிரித்தாடும் பயங்கரவாதம் உலகில் வெப்பம் அதிகரிப்பது வறுமைக்கும் வளத்துக்கும் இடையிலான இடைவெளி பெருகுவது முதலிய மனித குலத்தின் வாழ்வு மற்றும் வளர்ச்சியுடன் தொடர்புடைய உலகப் பிரச்சினைகள் தீர்க்க முடியும். புது வகை அச்சுறுத்தகளையும் அறைகூவகளையும் அழிக்க முடியும். 1 2
|