• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-21 11:22:44    
வளர்ந்து வரும் பேங் நிங் மஞ்சு இன தன்னாட்சி மாவட்டம்

cri

பேங் நிங் மாவட்டக் கட்சிக் கமிட்டியின் துணை செயலாளர் ஷாங், கூறியதாவது—

"பெய்ஜிங்கிலிருந்து மிக குறுகிய தூரத்தில் அமைந்துள்ள மலைப் பிரதேசமாகவும் புல் வெளியாகவும் விளங்கும் பேங் நிங் புகழ்பெற்றது. பெய்ஜிங்கின் பின்புற பூங்கா அதுவாகும். ஜூலை, ஆகஸ்டு திங்களில் பேங் நிங்கில் சுற்றுலா மேற்கோண்டோரில் 80 விழுக்காட்டினர் பெய்ஜிங்கிலிருந்து வருகின்றனர். ஆண்டுதோறும் குறைந்தது 4, 5 லட்சம் பெய்ஜிங் பயணிகள் இங்குள்ள புல் வெளியில் சுற்றுலா மேற்கொள்கின்றனர். தவிர, 10 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் விளையும் காய்கறிகள், பெய்ஜிங் மாநகருக்குச் சிறப்பாக விநியோகிக்கின்றன. பெய்ஜிங்கின் 300க்கு அதிகமான பேரங்காடிகளில் பேங் நிங் சிறப்பு உள்ளூர் பொருட்களைக் காணலாம். எனவே, சாலையில் லாரிகளும் பேருந்துகளும் அதிகம்" என்றார் அவர்.

அடிப்படை வசதிகளின் மேம்பாடானது, பேங் நிங் மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் நன்கு விற்பது, பயணிகள் இங்கு வந்து சுற்றுலா மேற்கொள்வது ஆகியவற்றுக்குக் காரணமாகும்.

"கடந்த சில ஆண்டுகளில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணி, முன்பை விட வலுவடைந்துள்ளது. இம்மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், அடிப்படை வசதி கட்டுமானத்துக்கென, 4 கோடி யுவான் முதலீட்டுடன் கூடிய திட்டப்பணிகளின் எண்ணிக்கை, 500 ஆகும். மணல்காற்று தடுப்பு மற்றும் காடு வளர்ப்புக்காக, இங்கு 300 கோடி யுவான் அரசு முதலீடு செய்துள்ளது" என்றார் அவர். இதில், லுவான் ஹே ஆற்றின் முதல் நிலை நீர் மின் நிலையத்தின் கட்டுமானத்துக்கு 23 கோடி யுவான் பயன்படுத்தியுள்ளது. இப்போது இது மின்சாரம் பிறப்பிக்கத் துவங்கியுள்ளது. பேங் நிங் மாவட்டத்தின் வழியாக உள் மங்கோலியாவுக்குச் செல்லும் நெடுஞ்சாலை கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமானத்துக்கு 50 கோடி யுவான் முதலீடு செய்யப்படுகிறது. பேங் நிங் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியை இந்த அடிப்படை வசதிகளின் கட்டுமானம் வெகுவாக முன்னேற்றுவித்துள்ளது.

1  2  3  4