• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-21 11:22:44    
வளர்ந்து வரும் பேங் நிங் மஞ்சு இன தன்னாட்சி மாவட்டம்

cri

"வேளாண் தொழிலில், குறிப்பாக கறவைபசு வளர்ப்பு, காய்கறி பயிரிடுவது முதலிய துறைகளில், எங்கள் மாவட்டம் முக்கியமாக ஈடுபடுகிறது. இங்கு விளையும் காய்கறிகள் மாசுப்படுத்தப்பட இல்லை என்பது ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார் அவர். இம்மாவட்டம் 26 ஆயிரம் கறவைபசுகளை வளர்க்கிறது. பல்வகை புகழ்பெற்ற பால் பொருட்கள் உற்பத்தி செய்கிறது. தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு உள்ளிட்ட 40க்கு அதிகமான தாது பொருள் வகைகளும் பேங் நிங்கில் புடைந்து கிடக்கின்றன என்றும் செயலாளர் ஷாங் கூறினார். இந்த வளமிக்க தாது பொருட்கள், பேங் நிங் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவிக்கும் புதிய ஆற்றலாக மாறியுள்ளன. தற்போது, இங்கு ஒரு கோடி யுவான் முதலீட்டுடன் கூடிய 60 திட்டப்பணிகளில் சில, உற்பத்தியில் இறங்கி, நல்ல பலன் பெற்றுள்ளன. 1998ஆம் ஆண்டில் இம்மாவட்டத்தின் நிதி வருமானம் 3 கோடி 80 லட்சம் யுவான் மட்டுமே. இவ்வாண்டு அதன் நிதி வருமானம் 13 கோடி யுவானை எட்டக் கூடும்.

மேலும், இம்மாவட்டத்தின் கல்வி நிலையை செயலாளர் ஷாங் எடுத்துரைத்தார். அவர் கூறியதாவது—

"வறிய மாவட்டமான பேங் நிங், கல்வி வளர்ச்சியில் பெரும் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, கிராமத்தின் அடிப்படை கல்வியை நாங்கள் ஆக்கப்பூர்வமாக ஆராய்ந்து, வளர்ச்சியுறச் செய்து வருகிறோம். ஓரளவு குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக கல்வியை வளர்ச்சியுற செய்யும் வழிமுறையை கண்டறிந்துள்ளோம்" என்றார் அவர்.

1  2  3  4