
Ga Rang, Zhaibung கோயிலின் ஒரு ஆசிரியர். தமது பணி குறித்து அவர் கூறியதாவது:
"நாங்கள் நாள்தோறும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்திருந்து, திருமறை ஓதுவோம். கொஞ்சம் ஓய்வு பெற்றப் பின் பாடம் சொல்லிக் கொடுப்பேன். பிற்பகலும் பாடம் உண்டு. இரவிலும் சொந்த படிப்பு. மாணவர்கள் சுய விருப்பத்துடன் படிக்கின்றனர். ஆகையால் நான் பாடம் சொல்லி கொடுப்பதில் அவ்வளவு களைப்பு இல்லை"என்றார் அவர்.
நாள்தோறும் திருமுறை ஓதுவது என்பது, குருமார் செய்ய வேண்டிய கடமையாகும். பொதுவாக, காலையிலும் இரவிலும் அவர்கள் திருமறை ஓருவர். பெரும்பாலான மதகுருமார்களைப் பொறுத்த வரை, திருமறை ஓதுவது, புத்தமத திருமறையிலுள்ள கருப்பொருளை விளங்குவது ஆகியவை, அவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானவை.

புத்தமத பட்டம் பெறுவதற்காகவே, குருமார்கள் இவ்வளவு சிரமப்பட்டுப் படிக்கின்றனர். திபெத் மரபு வழி புத்தமதத்தின் பட்டம், கிசி எனப் பொதுவாகக் கூறப்படுகின்றது. கண்டிப்புமிக்க கல்விமுறை அமைப்பு, இதுவாகும். திபெத்திய மத விவகாரங்களுக்குப் பொறுப்பான திபெத் தன்னாட்சிப் பிரதேச தேசிய இன மத விவகார பணியகத்தின் துணை தலைவர் Tu Deng இது குறித்து கூறியதாவது:
"மதகுருமார்கள், முதலில், வழிபாட்டு நிகழ்ச்சியில் ஓத வேண்டிய திருமறையை மனப்பாடம் செய்ய வேண்டும். பின்னர் வாய்மொழித் தேர்வில் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இதன் மூலம் கிசி பட்டம் தேர்வு மூலம் பெற முடியும். இதற்கு சுமார் 25 ஆண்டுகாலம் பிடிக்கும். இது, Xian Zong எனும் கல்லூரியில் திருமறையைப் படித்து முடிந்ததே. பின்னர், Mi Zong கல்லூரிக்குப்போய், மீண்டும் புத்த குருவாக இருக்க வேண்டும். இக்கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக படிப்பை முடிக்க முடியும்" என்றார் அவர்.
1 2
|