
Xian Zong, Mi Zong ஆகிய இரு கல்லூரிகளில் படிப்பை முடித்துக் கொள்ளும் குருமார்கள், 60, 70 வயதுடைய முதியோராகியுள்ளனர். லாசாவின் Jokhang கோயிலில் நடைபெறும் உச்ச நிலை கிசி தேர்வில் தேறிய பின், அவர்கள் கோயிலின் தலைமை குருவாக இருக்கலாம். கோயிலில் கடினமாகப் படிக்கும் குருமார்களின் மிகப் பெரிய விருப்பம், இதுவாகும்.

கால முன்னேற்றத்துடன், தற்போது, கோயில்களின் வாழ்கின்ற குருமார்களின் வாழ்க்கை, வளமாக இருக்கின்றது. பாடம் தவிர்ந்த நேரத்தில், தாம் விரும்பியவாறு செயல்படலாம். எடுத்துக்காட்டாக, தற்போது, திபெத் மரபுவழி புத்தமத கோயில்கள், பயணிகள் வருகை தரும் இடமாகியுள்ளன. அவற்றிலுள்ள குருமார்கள், சுற்றுலா வழிகாட்டியாக சேவை புரிகின்றனர். திபெத் மரபு வழி புத்தமத பண்பாடு பற்றியும் மத கலை பற்றியும் அவர்கள் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துகின்றனர். பயணிகளை வரவேற்கும் வகையில், பலர், அந்நிய மொழிகளையும் கற்றுக்கொண்டுள்ளனர். அந்நிய பயணிகளுடன் சரளமாகக் கலந்துரையாட வல்ல அளவுக்கு அவர்கள் அந்நிய மொழியைக் கற்றுத்தேர்ந்துள்ளனர். இப்போது, கோயில் மதகுருமார்களின் வாழ்க்கை மேலும் வளமிக்கதாக இருக்கின்றது. 1 2
|