• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-25 20:06:29    
ஹசாக் இனத் திருமணம்

cri

சீனாவின் வட மேற்கில் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் அமைந்துள்ளது. இங்கு, ஹசாக் இன மக்கள் வாழ்கின்றனர். நம்பிக்கையுடைய அவர்களுக்கென தனிச்சிறப்பியல்பு வாய்ந்த பழக்க வழக்கங்கள் உண்டு.

இவ்வின மக்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களின் படி, திருமணம் நடைபெறும் போது, ஆட்டைக் கல்விக்கொள்வது, குதிரைப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். முக்காடு விலக்கல் நிகழ்ச்சியை எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம். அப்போது, இது தொடர்பான பாடலைப் பாடகர் பாடுவர். திருமணத்துக்கு முன், முஸ்லிம்கள் முதலில் மத நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இவ்விழாவுக்கு இமாம், தலைமை தாங்குவார். மணமகனுக்கும் மணமகளுக்கும் திருமணச் சாட்சியாளர் உண்டு. அப்போது, மணமகன் சிறுபான்மைத் தேசிய இன ஆடையையும் தொப்பியையும் அணிந்துகொள்ள வேண்டும். மணமகள் தலைக்குட்டை அணிந்து கொள்ள வேண்டும். பெய்ஜிங்கில் பணி புரியும் அய்கனும், சானாழும் உருமுச்சி நகருக்குச் சென்று, திருமணம் செய்துகொள்ள விரும்பினர். எனவே, அவர்களின் திருமணம், உருமுச்சி நகரிலுள்ள ஹசாக் இன ஹோட்டலில் நடைபெற்றது. மணமகள் வரவேற்பு என்பது, திருமண விழாவின் ஒரு முக்கிய பகுதியாகும். அப்போது இது தொடர்பான பாடல்கள் பாடப்படும். பெற்றோர், சகோதரி, சகோதரர் ஆகியோரை விட்டுச்செல்ல விரும்பாத மணமகளின் உணர்வை இப்பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. திருமணத்துக்கு முன்பு, மணமகன் தமது நண்பர்களுடன் மணமகளுடைய வீட்டுக்குச் செல்வான். மணமகளுடன் வாகனத்தில் ஊர்வலமாக வந்து திருமண நிகழவிருக்கும் இடத்தை அடைந்ததும், திருமண விழா துவங்குகிறது.

1  2