• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-25 20:06:29    
ஹசாக் இனத் திருமணம்

cri

மணமக்கள், இளம் நங்கையர் மற்றும் இளைஞர்களுடன், திருமண மண்டபத்தில் நுழைந்தனர். மணமகள், வெண்ணிறத் திருமண ஆடையும், மணமகன், கறுப்பு நிற மேலை நாட்டுப் பாணி ஆடையும் அணிந்திருந்தனர். அய்கனின் திருமண விழாவில், இசைக் கச்சேரி, நடைபெற்றது. மகிழ்ச்சியூட்டும் துங்புலா இசை மற்றும் முக்காடு விலக்கல் பாடலுடன் அய்கனின் திருமணம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. பெற்றோருக்கு நன்றி தெரிவிப்பது, மணமகளின் அழகைப் பாராட்டுவது, குடும்ப வேலையில் எவ்வாறு செவ்வனே ஈடுபடுவது, மாமனாருக்கும் மாமியாருக்கும் மதிப்பு அளிப்பது, அண்டை அயலாருடன் சுமுகமாக வாழ்வது ஆகியவை பற்றி, மணமகளுக்கு அறிவுரை கூறுவது என்பது, இப்பாடல்களின் முக்கிய உள்ளடக்கமாகும். பாடல்கள், நகைச்சுவை மிக்கவை. இசைச் செவிமடுப்போர், சிரிக்காமல் இருக்க முடியாது.

ஒவ்வொரு பாடல் வரியைத் தொடர்ந்து, மணமகனும் மணமகளும் மூத்தவருக்குத் தலை வணங்கி, மரியாதை செலுத்துவர். முக்காடு விலக்கல் தொடர்பான பாடல்களனைத்தும் பாடிமுடிக்கப்பட்டதும், மண விழாவுக்குத் தலைமை தாங்குபவர், சாட்டை கொண்டு, மணமகளுடைய முக்காட்டை விலக்கினார். அப்போது, மணமகனுடைய தாய், முன் வந்து, மணமகளுடைய நெற்றியில் முத்தமிட்டு, அவரை வரவேற்றார்.

பின்னர், உறவினரில் மூத்தவர் ஒருவர், புதிய தம்பதிக்குத் தொழுகை நடத்தினார். அவர்களின் எதிர்கால வாழ்க்கை, இன்பமயமாக இருக்க வேண்டும் என வாழ்த்தினார். பின்பு, இசைக் குழு இசைக்கத் துவங்கியது. பண்டபத்தின் நடுவில் மணமக்கள் ஆடிப்பாடிக் கொண்டாடினர்.

பாரமம்பரிய ஹசாக் இன உணவு வகைகள், விருந்தினர்க்குப் பரிமாறப்பட்டன. மண்டபம் எங்கெங்கும் மகிழ்ச்சி சூழ்நிலை தாண்டவமாடிற்று,

அதன் பின், மணமகனும் மணமகளும், நண்பர்களின் ஆரவாரத்தினிடையே திருமண அறையில் நுழைந்தனர்.


1  2