• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-25 17:57:48    
இளம் பாடகி JIANG XIN

cri
JIANG XIN எனும் சீனாவின் புகழ்பெற்ற இளம் பாடகி, பாடல் பாடுவதோடு, பாடல் இயற்றுவதிலும் இசை அமைப்பதிலும் வல்லவர். அண்மை ஆண்டுகளில், அவர் நாவல் எழுதத் துவங்கினார். அவருடைய சொந்த கதையை நாவலாக எழுத, அது இணைய தளத்தில் மிகவும் வரவேற்கப்பட்டது.

நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, JIANG XIN இயற்றிப் பாடிய பாடல்—சுத்தம் எனும் பாடல். சூரியன் ஒளிபடும் இடங்களில், உயிர்த்துடிப்புடன் கூடிய எதிர்ப்பு இருக்கிறது. தூய்மையான முகித்தை, தங்கக் கடலாக உருவாக்கிக்கொள்கிறது என்று, அவர் இப்பாடலில் பாடினார். பாட்டுத் திறனும் தலைசிறந்த தயாரிப்பு நுட்பமும் கொண்ட இந்த ஒலி நாடா, 2004ம் ஆண்டில் சீனாவின் ராக் இசை ஒலி நாடாகளில் முதலிடம் பெற்றுள்ளது.

சீனாவின் SHAN DONG மாநிலத்தின் QING DAO நகரில் பிறந்த JIANG XIN, 6 வயதில் தந்தை மற்றும் தாயுடன் பெய்ஜிங்கிற்கு வந்தார். அவர், குழந்தைப் பருவத்திலேயே ஆடல்பாடலில் தேர்ச்சி பெற்றிருந்தார். துவக்க பள்ளியிலிருந்து இடைநிலை பள்ளி வரை, அவர், பள்ளியிலுள்ள பண்பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கிய தூணாக திகழ்ந்தார். 1988ம் ஆண்டு, அவர் பெய்ஜிங் பொருளாதார கல்லூரியில் கணக்கு பாடம் எடுத்துப் படிக்கின்றார். ஆனால், கணக்கு பாடத்தில் விருப்பம் இல்லாமல் போகவே, அவர் அடிக்கடி அறையில் தங்கி, பாடல்களைப் பாடிக் கழித்தார்.

ஒரு எதிர்பாராத வாய்ப்பில், அவர் சில பாடகர்களை அறிமுகம் செய்து கொண்டார். இந்த நண்பர்களின் பாதிப்பில், JIANG XIN, வெளிநாட்டு வேறுபட்ட கட்டமான, வேறுபட்ட வகை இசைமுறைகளைப் பின்பற்றத் தொடங்கினார். தனக்குப் பிடித்தமான இசையை அமைத்து, பாடலையும் பாடுவது, அவரின் கனவாக மாறியுள்ளது. தமது பாதையை தானே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று, அவருடைய பெற்றோரிடம் சொன்னார். அவர் கூறியதாவது:

தந்தை பெற்றோரின் வாழ்க்கை, ஒழுங்காக இருக்கின்றது. ஆனால், எமது தலைமுறையில், சீனாவில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள், குறிப்பாக சிறப்பு கருத்துடையவர்கள், தமக்கு விரும்பும் பாதையைத் தேர்ந்தேடுக்க வேண்டும். நானும் அவர்களில் ஒருவர் என்றார் அவர்.

19 வயதான JIANG XIN, ஈடுபடத் துவங்கினார். நாள்தோறும் பல்வேறு ஆடல்பாடலகங்களுக்கிடையில் செல்ல வேண்டிய போதிலும், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அப்போது, பெரும்பாலான பாடகிகள், சீனாவின் ஹாங்காங் மற்றும் தைவான் பிரதேசங்களின் பாப் பாடலைப் பாடினர். ஜீன்ஸ் சட்டை அணிந்து ஆங்கில மொழியில் ராக் பாடலைப் பாடிய JIANG XIN, விரைவாக பிரபலமானார்.

1995ம் ஆண்டில், தமது தனிச்சிறப்பான மந்திர சக்தி மற்றும் பெரும் உள்ளாற்றலுடன் திகழ்ந்த அவரை, ஒலிப்பதிவு தொழில் நிறுவனம் ஒன்று கண்டறிந்து, உடன்படிக்கை செய்துகொண்டது. இப்பொழுது முதல், அவர் ஆடல்பாடலகத்தில் பாட்டுப்பாடும் வாழ்க்கையை நிறுத்திவிட்டு, உண்மையான பாடகியாக மாறினார்.

1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040