இதுவரை, அவர் மூன்று ஒலி நாடாக்களை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு ஒலி நாடாவும் அதிகமான கவனத்தை ஈர்த்துள்ளது. JIANG XIN, பாடல் இயற்றும் திறமையுள்ள பாடகி ஆவார். தாமே ஷெந்தமாக பாடல் வரிகளையும் இசையையும் இயற்றுவது மட்டுமல்ல, இசைத் தொகுப்பு பணியிலும் அவர் கலந்துகொள்கின்றார். தாம் பாடும் பாடல்களை தாமே தொகுத்து வழங்கினால், அதன் பொருளை மேலும் சரியாக காட்ட முடியும் என்றார் அவர். அவர் மேலும் கூறியதாவது:
முன்பு, எனக்கு பிடிக்கும் பாடலை, நான் பிரதி எடுத்து பாடினேன். பிறகு, இயற்ற வேண்டுமென எமக்கு தெரியும். வரியையும் இசையையும் எழுதியது மட்டுமல்ல, இசையைப் பதிப்பிக்க வேண்டும். நான் வெளியிட வேண்டிய பொருளை எழுத வேண்டும் என்றார் அவர்.
வாழ்க்கைக்கான அன்பு மற்றும் அனுபவத்திலிருந்து பெற்றுள்ள இந்தப் பாடல்களில், அர்த்தம் நிறைந்ததால், மக்களுக்கும் மிகவும் பிடிக்கிறது. அவர், எளிதான இசை மற்றும் பாடல் பயன்படுத்தி, காதலையும் கனவையும் பதிவு செய்துள்ளார். அவருடைய நேர்மையான இசை, மக்கள் ஆழமாக உணர்ச்சி வசப்படுத்தியுள்ளது.
JIANG XIN, சிறந்த பாடகி மட்டுமல்ல. எழுத்திலும் தேர்ச்சி பெற்றவர். செய்தித்தாள், பத்திரிகைகளில் சிறப்பு கட்டுரைகளை எழுதுவதோடு, நாவலையும் வெளியிட்டார். 1999ம் ஆண்டில், நீண்ட கூந்தல் பறக்கும் காலம் என்ற நாவல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவருடைய சொந்த வாழ்க்கைக் கதை பற்றிய இந்த நாவலில், அவர் தமது காதலை பற்றி எழுதியுள்ளார். இந்தக் கட்டுரை, நேர்மையான இயற்கையான உணர்ச்சியைக் கொண்டு, இணைய தளத்தில் விரிவாக பரவியுள்ளது.
பாட்டுபாடுவது அல்லது எழுதுவது, அவர் தமது உணர்வுகளை வெளியடும் முறை ஆகும். இது குறித்து, அவர் கூறியதாவது:
குழந்தை பருவத்தில், புத்தகம் படித்த போது, தற்காலிக உணர்ச்சிகளைப் பதிவு செய்யும் பொருட்டு, புத்தக்கத்தில் எனது யோசனையை எழுதினேன். 1999ம் ஆண்டு முதல், நான் எழுத துவங்கினேன். என்னைப் பொறுத்த வரை, உணர்ச்சியைக் காட்டுவதற்கு, எழுதுவது தான், எனக்கு மிகவும் பிடிக்கிறது என்றார் அவர்.
வாழ்க்கையில், JIANG XIN மிகவும் ரோமென்த்திக் ஆவார். கணவன் அல்லது நண்பர்களுடன் கார் ஓட்டி, விரும்பும் இசையைக் கேட்டு, காட்சிகளைப் பார்ப்பது அவருக்கு பிடிக்கிறது. இயற்றுவதற்கான உள்ளுணர்வு அப்பொழுது ஏற்படுகிறது என்று, அவர் கூறினார். 1 2
|