• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-03 13:35:12    
சென் நுங் ஜியா எனும் இயற்கைப் புகலிடம்

cri

சீனாவின் மத்தியப்பகுதியில் ஹுபெய், சி சுவான் ஆகிய இரண்டு மாநிலங்கள் சந்திக்குமிடத்தில் சென் நுங் ஜியா அமைந்துள்ளது. அங்கு, மலைகள் தொடர்ச்சியாக அமைந்து காணப்படுகின்றன. அடர்ந்த காடுகளில், எண்ணற்ற அரிய காட்டு தாவரங்களும் வன விலங்குகளும் காணப்படுகின்றன. ஆகையால், இவ்விடம் "வன விலங்கு மற்றும் தாவர தோட்டம்" என கூறப்படுகின்றது.

சிறப்பு வாய்ந்த புவி நிலை மற்றும் மேம்பாடான கால நிலையினால், இங்குள்ள வியிரினங்களின் வகை, பலதரப்பட்டது. உயிரின வாழ்க்கை சூழல் மிகவும் மேம்பாடானது. முழுமையான தொடக்கக்கால உயிரின வகைகள் வளர்கின்றன. உயிரின இனங்களின் பல தரப்பட்ட தன்மையையும் எடுத்துக்காட்டுத் தன்மையையும் இன்ன பிறவற்றையும் ஆதாய்வதற்கான சிறந்த இடமாக, சென் நுங் ஜியா திகழ்கின்றது.

இங்குள்ள உயிரினத்தின் பலதரப்பட்ட தன்மையை மேலும் பாதுகாக்கவும், அறிவியல் ஆய்வில் ஈடுபடவும், 23 ஆண்டுகளுக்கு முன், சீன அரசு சென் நுங் ஜியா பிரதேசத்தின் 70 ஆயிரம் ஹேக்டர்க்கு அதிகமான நிலத்தை இயற்கை புகவிடமாக வரையறுத்தது. 1990ஆம் ஆண்டு, யுனேஸ்கோ இப்புகலிடத்தை, சர்வதேச மனிதர் மற்றும் உயிரின வளைய பாதுகாப்பு மண்டல வலைப்பின்னலில் சேர்த்துள்ளது. 1992ஆம் ஆண்டு உலக வங்கியின் உலக நிதியத்தைச் சேர்ந்த நன்கொடை நிதி உதவி நிகழ்ச்சியில் இது சேர்க்கப்பட்டுள்ளது.

சென் நுங் ஜியாவிலுள்ள இயற்கை புகவிடம் பற்றி அதன் தலைவர் திரு சியெ தெங் பெங் வருமாறு கூறுகின்றார்.

இங்கு, தாவரங்கள் பல்வகைப்பட்டவை. அவை, பண்டைக் கால, அற்புதமான, அரிய தனித்துவம் உடையவை. புள்ளிவிவரங்களின் படி, இயற்கை புகலிடத்தில் 3106 வகை உயரிய தாவரங்கள் உள்ளன. 34 வகை அரிய தாவரங்கள் சீனாவின் சிறப்பு பாதுகாப்பில் உள்ளன. அழிவின் விளிம்பில் உள்ள, ஆனால் பாதுகாக்கப்பட வேண்டிய தாவரங்களின் எண்ணிக்கையில் அவை சுமார் 8.2 விழுக்காடாகும்.

சென் நுங் ஜியா, உலகில் காண்பதற்கு அற்புதமான தாவர களஞ்சியமாகும். 67 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முந்திய தாவரங்கள் இங்கு உள்ளன. அண்மையில் அழிவின் விளிம்பில் உள்ள அரிய 5 தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சென் நுங் ஜியாவிலுள்ள ஏராலமான விலங்கு வளத்தில், சீனாவின் முதல்நிலை அரசு பாதுகாப்பிலுள்ள அரிய விலங்கான பொன்நிற ரோம குரங்கும் ஒன்று ஆகும்.

1  2