யோகா பயிற்சி எனக்கு மிகவும் பொருந்தமானது. முன்பு நான் குண்டாக இருந்தேன். யோகா பயிற்சி எடுத்த பின், ஒல்லியாக மாறினேன். கடந்த ஆண்டு முதல் இது வரை எனது உடல் எடை நிதானமாக ஒரே அளவில் இருந்து வருகிறது. இதனால், யோகா பயிற்சி பயனுள்ளது என்று உறுதியாக நம்புகிறேன். பயிற்சியின் போது, தசைகள் இயல்பான நிலையில் இருக்கும் என்றார் அவர்.
யோகா பயிற்சியைப் படிக்கும் மகளிர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி மையங்கள் மேலும் அதிகமாக தொடங்கப்பட்டன. பெய்ஜிங் கிழக்கு பகுதியிலுள்ள பாங்கோ எனும் யோகா பயிற்சி மையம், 6 திங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இதுவரை சுமார் 200 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இங்குள்ள உடல் கட்டுமான ஆலோசகர் திரு CHENG CHUN கூறியதாவது:
யோகா, எடைக் குறைவு வடிவம் அல்ல, இது, மனித உடலை நீட்டுவதன் மூலம், உடல் முழுவதிலும் சுரப்பிகளை சமநிலையில் வைக்கிறது. இதனால், பயிற்சி செய்வோரின் உடல் உருவம் சரியாக மாற முடியும் என்று அவர் தெரிவித்தார்.
உடல் நலத்தைப் பெற, யோகா பயிற்சி அகத்துக்கு சென்றுள்ள சீன மகளிர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடல் பயிற்சியில் ஈடுபடுவதோடு, பலர் தமது உடல் எடையையும்க் குறைத்தனர். உரிய உடற்பயிற்சி, போதுமான தூக்கம், சரியான சாப்பாடு ஆகியவற்றில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். 1 2
|