• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-05 20:49:57    
சர்க்கரை நோயாளிக்கு தேவையைன உணவு பெட்டி

cri

நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் சர்க்கரை நோயாளிகளுக்கு மேலும் பல தகவல்களை வழங்குகின்றோம்.

முதலில் இது பற்றிய செய்திப் பன்னணி தகவலை கூறுகின்றோம். நவெம்பர் திங்கள் 14ம் நாள் 13வது உலக சர்க்கரை நோய் நாளாகும். சர்க்கரை நோயும் உடல் பருமனும் என்பது இவ்வாண்டு உலகின் சர்க்கரை நோய் நாளின் தலைப்பாகும். சர்க்கரை நோயானது நவீன மனித குலத்தின் உறுதிப்படுத்தாத 3 வகை கடும் நோய்வகைகளில் ஒன்றாகும். உலகில் இந்த நோயினால் அல்லல்பட்டவரின் எண்ணிக்கை 12 கோடியே 50 லட்சத்தை எட்டியுள்ளது. சீனாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 4 கோடியாகும். பல நாடுகளில் 30 கோடி மக்களிடையே சர்க்கரை நோய் ஆபத்து நிலவுகின்றது. இந்த நோய் உருவாகும் காரணி இதுவரை முழுமையாக கண்டறியப்பட வில்லை. இதை வேரோடு அழிக்கும் வழிமுறை கிடையாது. ஆனால் ஜீன் தவிர, இது வாழ்க்கை முறையுடன் மிகவும் நெருங்கிய தொடர்புள்ள நோயாகும். நியாயமற்ற உணவுப் பழக்கங்கள் உடல் பயிற்சி பற்றாக்குறை, புகைப் பிடித்தல், மது குடித்தல் முதலிய தீய வாழ்க்கை முறை சர்க்கரை நோய் உருவாவதற்கு வழிவகுக்கக் கூடும்.

சர்க்கரை நோய் உண்டான பிறகு எப்படி உடல் பயிற்சியில் ஈடுபடுவது, இதில் ஈடுபடும் போது எப்படி உணவு உட்கொள்வதில் கவனம் செலுத்துவது என்பது பற்றி இன்றைய நிகழ்ச்சியில் தகவல் கூறுகின்றோம்.

உடல் பயிற்சியி செய்யும் சர்க்கரை நோயாளி பட்டினி கிடந்தால் முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லா விட்டால் உயிர் ஆபத்து வரும். சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்படும். ஆகவே அவர்கள் உடல் பயிற்சியில் ஈடுபடும் போது பிஸ்கட், மித்தாய் போன்ற சிற்றுண்டி வைக்கப்பட்ட உணவு பெட்டி கையில் இருக்க வேண்டும். அவர்களை பொறுத்தவரை, மருத்துவர்களின் வழிக்காட்டியபடி தமக்கு பொருத்தமான உடல் பயிற்சி முரைகளைப் பின்பற்றுவது நல்லது. இதய நோய் போன்ற எதிர்பாராத நிலைமையை தடுக்க முடியும். ரத்த சர்க்கரை எளவைக் கட்டுப்படுத்துவதற்கு இது துணை பங்கு வகிக்க முடியும். பெய்சிங் மாநாகரின் சர்க்கரை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை

பணியகத்தின் தலைவரான பேராசிரியர் யுவான் சன் யுனென் கூறியதாவது: பல வகை உடல் பயிற்சி முறைகளில் நடவது என்பது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பொருத்தமானது. அரை மணி நேரம் நடந்தால் உடலில் இருக்கின்ற 90 கலோரி எரிக்கப்படுகின்றது. அவர்கள் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதில் இது மிகவும் பயன்படுகிறது. குறிப்பிட்ட அளவில் இன்சுலின் அதிகரிக்க இது துணைபுரியும். நோயாளிகள் வாரத்துக்கு 5 நாட்களில் தினமும் அரை மணி நேரமாவது நடக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவசரமாக குணமடைய வேண்டும் என்ற இயல்புக்கு புறம்பான ஆர்வம் நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே மருத்துவரின் வழிக்காட்டலின் கீழ் உடல் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.
1  2