
எந்த நிலையில் உடல் பயிற்சியில் ஈடுபடலாம் என்பது பற்றி பேராசிரியர் யுவான் அவருடைய கருத்தை தெரிவிக்கிறார். அதாவது சர்க்கரை நோயாளி உட்கொண்டு ஒரு மணி நேரம் கழிந்த பின் உடல் பயிற்சியி செய்யலாம். கொஞ்சம் வியர்வை வருவது சிறந்த நிலைமையாகும். சுவாசம் அதிகம், இதயம் அதிகமாக துளிப்பது வியர்வை வருவது போன்ற நிலைமை காணப்பட்டால் பயிற்சி அளவுக்கு மீறுவதாகப் பொருள். இந்த நிலைமையில் உடனடியாக ஓய்வு எடுக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளியின் இன்சுலின் உருவாகுவது பாதிக்கப்பட்டுமானால் ரத்தத்தில் சர்க்கரையை சமநிலையில் கட்டுப்படுத்தும் திறன் இழந்துவிடுகின்றது. அளவுக்கு மீறி உ.டல் பயிற்சி செய்தால் குறைவான ரத்த சர்க்கரை, களைப்பு, தலை சுற்றுவது போன்ற நிலைமை உடல் பயிற்சி செய்து முடித்ததும் மூச்சுத்திணறல் உடல் உணர்ச்சி இன்றி மரத்துப் போதல் போன்ற நிலைமை ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிக்காத நிலையில் உயிராபத்து வரும். ஆகவே சர்க்கரை நோயாளி தாழ்ந்த ரத்த சர்க்கரை நிலைமை வந்த பின் உணவு உட்கொள்வதற்கு முன் உடல் பயிற்சி செய்வதற்கு இடையில் ஒரு துண்டு ரொட்டி, சில பிஸ்கட்டுகள் உட்கொண்டு குறைவான ரத்த சர்க்கரை நிகழாமல் தவிர்க்கலாம். குறைவான ரத்த சர்க்கரை நிலை ஏற்பட்டால் உடனடியாக உடம்புக்கு ஏற்கக் கூடிய பழந்சாறு நிறைந்த மித்தாய் தின்ன வேண்டும். சாக்லேட் போன்ற மித்தாய் உடம்புக்கு அவ்வளவு நன்மை தராது. உடல் பயிற்சியில் ஈடுபடும் சர்க்கரை நோயாளிக்கு பிஸ்கட் பழஞ்சாறு நிறைந்த மித்தாய் ஆகியவை இடம் பெறும். உணவு பெட்டி கையில் இருக்க வேண்டும் என்று பேராசிரியர் யுவான் வற்புறுத்திக் கூறுகினார். ஆகவே நேயர்களே நாங்கள் மருத்துவரின் அறிவுரை கேட்டும் அனுபவத்தின் மூலமும் கற்றுக் கொள்ள வேண்டும். இது நமது வாழ்க்கையில் மட்டுமல்ல நமது குடும்பத்தினருக்கும் நன்மை வழங்கும். அல்லவா. சரி இன்றைய நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியின் முதலாவது பகுதி இதுவரை வழங்கியுள்ளோம். 1 2
|