2004ஆம் ஆண்டு சீனப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சி உலகில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது. அது வெளிநாடுகளிலிருந்து ஏராளமான மூலப் பொருட்களை உட்புகுத்தியதால், அதன் வணிகப் பொருளின் விலை பெரும் அளவில் உயர்ந்துள்ளது. அமெரிக்காவுக்கான அதன் அதிக அளவு ஏற்றுமதியானது அமெரிக்க டாலரை மதிப்பிறக்கச் செய்துள்ளது என்று பிரிட்டிஷ் "THE SUNDAY TIMES" எனும் செய்தித்தாள் கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் வெளியிட்ட ஒரு கட்டுரை கூறுகின்றது.
2004ஆம் ஆண்டின் பொருளாதார நிலைமையை நினைவுக் கூரும் போது, சுவீட்சர்லாந்து வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஜோர்ச் மாக்னுஸ் பல ஆய்வாளர்கள் போல மூன்று முக்கிய பிரச்சினைகளில் மட்டும் கவனம் செலுத்தினார். சீனாவின் வளர்ச்சி, அமெரிக்க டாலரின் மதிப்பிறக்கம், எண்ணெய் மற்றும் இதர வணிகப் பொருட்களின் தீவிர விலையேற்றம் என்பன இந்த மூன்று பிரச்சினைகளாகும். அமெரிக்காவின் நுகர்வோரும் சீன உற்பத்தி வணகரும் இன்றைய உலக பொருளாதார வளர்ச்சிக்கான 90 விழுக்காட்டு உந்து ஆற்றலாக விளங்குகின்றனர் என்று நியார்க்கிலுள்ள ஒரு கூட்டு நிறுவனத்தின் தலைமை பொருளியலாளர் ஸ்திவென் ரோச்சி கூறினார்.
சீனப் பொருளாதாரம் அளவுக்குமீறி வளர்கின்றது என்று துவக்கத்தில் மக்கள் கருதியிருந்தனர். பின்னர் சீன அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டதால், அதன் பொருளாதார அதிகரிப்பு விகிதம் 19.5 விழுக்காட்டிலிருந்து 14.8 விழுக்காட்டாக இறங்கியது. இப்பொழுது, சீனாவை பொறுத்தவரையில், சீர்திருத்தம் துவங்கிய போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா என்பதே பிரச்சினையாகும் என்றும் ரோச்சி கூறினார்.
ஜப்பானின் ஒரு முக்கிய செய்தித்தாள், கடந்த டிசம்பர் 27ஆம் நாள் "உயர்நதுவரும் சீனாவின் உள்ளார்ந்த போட்டியாற்றல்" என்ற தலைப்பில் உலகின் 50 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் உள்ளார்ந்த போட்டியாற்றல் பற்றிய ஜப்பானிய பொருளாதார ஆய்வு மையத்தின் அறிக்கையை வெளியிட்டது. போட்டியாற்றலை அளவிடும் போது, உலக மயமாக்கம், தொழில் நிறுவனம், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட 8 துறைகளிலான காரணிகளை இந்த அறிக்கை கருத்தில் கொண்டது. சிங்கப்பூரும் ஹாங்காங்கும் உலக மயமாக்கம் மற்றும் அடிப்படை வசதி துறைகளில் குறிப்படத்தக்க மேம்பாட்டை கொண்டுள்ளன.
1 2
|