• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-05 20:36:15    
வெளிநாட்டவரின் பார்வையிலுள்ள சீனப் பொருளாதாரம்

cri

சுமார் 8 விழுக்காடு என்ற பொருளாதார அதிகரிப்பு விகிதத்தை நிலைநாட்டும் சீனாவின் உள்ளார்ந்த போட்டியாற்றல் அதிகரித்துவருகின்றது. சீனா மற்றும் ஆசியாவின் முக்கிய நாடுகள் பிரதேசங்களின் பொருளாதார அதிகரிப்பு நிலைமை பற்றி இவ்வறிக்கை ஆய்வு செய்துள்ளது. சீனாவின் போட்டியாற்றலை அளவிடும் பல்வேறு துறைகளில், சர்வதேச மயமாக்க துறையில் சீனாவின் குறியெண் குறிப்பட்ட அளவில் உயர்ந்துள்ளது.

1980ஆம் ஆண்டு இருந்த 41.2 இலிருந்து 2004ஆம் ஆண்டு 52.3 ஆக உயர்ந்துள்ளது. ஆசிய நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 13ஆம் இடம் அது வகிக்கின்றது. ஹாங்காங் 2ம் சிங்கப்பூர் மூன்றாம், மலேசியா பத்தாம் இடம் வகிக்கின்றன என்று இந்த அறிக்கை கூறுகின்றது. சீனாவின் சர்வேதச மயமாக்க குறியெண் உயருவதற்கான உந்து ஆற்றல், அதன் வர்த்தக தொகையின் பெரும் அளவு அதிகரிப்பாகும். 2002ஆம் ஆண்டு, அதன் வர்த்தக மதிப்பு சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் வகிக்கும் விகிதாசாரம் 1980ஆம் ஆண்டில் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகரித்தது.

2001ஆம் ஆண்டு சீனா உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த பின், அதன் சந்தை வெளிநாடுகளுக்கு வேகமாக திறந்துவிடப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு அதன் சராசரி காப்புவரி விகிதம் 15.3 விழுக்காட்டாக இருந்தது. ஆனால் 2004ஆம் ஆண்டு அது 10.4 விழுக்காடாக இறங்கியது. எனவே, அந்த ஆண்டு அதன் வர்த்தக மதிப்பு ஜப்பானைத் தாண்டி, அமெர்க்கா, ஜெர்மனி ஆகியவற்றை அடுத்து உலகில் மூன்றாம் இடம் வகிக்கின்றது என்று அறிக்கை கூறுகின்றது.

தவிரவும், சீனாவுக்கான வெளிநாடுகளின் நேரடி முதலீட்டுத் தொகையும் பெரும் அளவில் அதிகரித்துள்ளது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 1980ஆம் ஆண்டு 0.5 விழுக்காடு மட்டும் வகித்தது. ஆனால் 2002ஆம் ஆண்டு அது 35.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி என்ற நோக்கத்துக்கான முதலீடு, வர்த்தகத்துக்கான உற்பத்தி விரிவாக்கத்துக்கு மாபெரும் பங்காற்றியுள்ளது என்று அறிக்கை இறுதியில் கூறுகின்றது. நேயர்கள் இதுவரை, தமிழ்ச் செல்வம் தொகுத்து வழங்கிய சீனாவுக்கு அப்பால் எனும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.


1  2