ஷாங்காய் மாநகரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் செஜியாங் மாநிலத்தின் யிவூ நகரம் அமைந்துள்ளது. இந்நகரைச் சூழந்து, நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் கொண்ட மாபெரும் தொழிற்துறை மண்டலம் ஒன்று காணப்படுகின்றது. இது பயணிகளால் வரவேற்கப்படும் நகரம் அல்ல. ஆனால், செய்தொழிலை முக்கியமாக கொண்ட இந்நகரம் வெளிநாட்டவர்களிடையே சீனாவின் மிகவும் புகழ்பெற்ற இடங்களில் இது ஒன்றாகும். வெளிநாட்டு வணிகர்கள் இங்கு வந்து ஆடை, விளையாட்டுப் பொம்மைகள், சிறு உலோக கருவிகள், அலங்காரப் பொருட்கள் முதலியவற்றை மிக அதிகமாக வாங்கி, உலகில் பல்வேறு இடங்களுக்குச் சென்று விற்பனை செய்வர்.
யிவூ நகரிலுள்ள பல்வேறு சிறப்பு சந்தைகளில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் தீவிரமான வர்த்தகப் போட்டியிடுகிறார்கள். சீனாவின் இந்த புத்தம்புதிய வணிக நகரில், 27 ஆயிரம் விற்பனை அறைகள் உள்ளன. இந்த நகரத்துக்கு உலகில் முதல் பெரிய சந்தையாக மாறும் திட்டமும் உண்டு.
எமது உற்பத்திப் பொருட்களில் 95 விழுக்காடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது என்று வணிகர் வூ யாஜிங் தெவிரித்தார். அவர் ஏனைய பன்னூறு வணிகர்களை போல, கை வளையம், தலையணி, உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை விற்பனை செய்கிறார்.
எங்கள் பொருட்களை வாங்குபவர்களில், ஜெர்மனியர், ஐப்பானியர், இத்தாலியர், அமெரிக்கர் ஆவர். சிலர் மத்தியக் கிழக்கு பிரதேசத்திலிருந்து வந்தவர்கள். அனைத்து பொருட்களுக்கும் வியாபாரம் உடனே நடக்கின்றது. நிலையான விலையும் இல்லை என்று ஒரு விற்பனை அறையின் பெண் உரிமையாளர் கூறினார்.
சொலன். ஸ்பெசெஸ்கி என்பவர், மசாதோனியாவிலிருந்து வந்த வணிகர். இது அவரது மூன்றாவது யிவூ பயணமாகும். பொருட்களின் வகைகள் மிக அதிகம் என்பது இந்த சந்தையின் மேம்பாடாகும். இங்கிலிருந்து சிறு தொகுதி தொகுதியாக வாங்கிக்கொள்ளலாம். சீனாவின் இதர இடங்களில் இப்படி வாங்க முடியாது என்று அவர் கூறினார்.
1 2
|