நிர்வாகத் துறையில் படித்து பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற அவர், தம் சொந்த நாட்டில் ஒரு தொடர் கடையை அமைத்துக்கொண்டே இருக்கின்றார். கடையில் விற்பனையாகும் அனைத்து பொருட்களும் சீனப் பொருட்கள் தான். மசாதோனியாவில், தெற்கு பால்கன் பிரதேசத்து பொருள் புழக்க மையத்தையும் நிறுவ அவர் எண்ணுகின்றார். மையத்தில் சீனப் பொருட்கள் மட்டும் விற்பனையாகின்றன சீனர் ஐரோப்பாவில் பொருட்களை விற்பனை செய்வதை விட நான் நேரடியாக சீன ஐரோப்பிய வர்த்தம் செய்வது மேலும் நல்லது தான் என்று சோலன் கருதுகின்றார்.
யிவூ நகருக்கு வரும் வெளிநாட்டவர்களில், ஆசிய சந்தையிலான அனுபவமிக்க வியாப்பாரிகளும் உள்ளனர். லெபனான் வணிகர் அலி.ஜபார் 25 ஆண்டுகளுக்கு முன், ஹாங்காங், தைவான், தென் கொரியா ஆகியவற்றுக்கு அடிக்கடி சென்றுவந்தார். கடந்த 4 ஆண்டுகளில் அவர் ஆண்டுதோறும் யிவூ நகருக்கு 6. 7 முறையாக வர வேண்டும். அவர், காபோனில் வர்த்தகத்தில் ஈடுபடும் தமது இரண்டு மக்களுக்கு பொருட்களை வாங்கி, திரட்டுகிறார். பிறகு இவற்றை ஒட்டுமொத்தமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவார். அவர் ஒடர் செய்த பொருட்கள் மத்திக் கிழக்கிலும் நல்ல விற்பனையாகின்றன. எடுத்துக்காட்டாக, குர்ஆன் வாசகங்களை செதுக்க பயன்படும் மர பலகை அங்கு மிகவும் வரவேற்கப்படுகின்றது.
யிவூ நகரில் நாளுக்குநாள் சுறுசுறுப்பாகி வரும் வர்த்தகம், மத்தியக் கிழக்கு, ஆப்பிரிக்கா, தென்னாசியா ஆகியவற்றிலிருந்து வரும் வணிகர்களை ஈர்த்துள்ளது. அவர்கள் இங்கு வந்து கம்பெனியின் கிளையை நடத்துவர் அல்லது கடையை நடத்துவர். தலைமையகத்தை டிபாயில் அமைத்துள்ள மொராக்கோ வணிகர் ஒருவர் 8 திங்கள் காலத்துத்து முன்னரே, யிவூ வந்து, கிளைக் கம்பெனியைத் துவக்கியுள்ளார். யிவூ நகரிலுள்ள ஒரு இஸ்லாமிய உணவகத்தில் எமது செய்தியாளரிடம் பேசுகையில், யிவூ நகரம் மிகவும் நல்லது, எனக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் இங்கு கிடைக்கும். இந்த மொராக்கோ வணிகர், ஒவ்வொரு முறையும் ஒரு லட்சம் டாலர் மதிப்புள்ள பொருட்களை கொள்கலப் பெட்டிகளில் சொந்த நாட்டுக்கு அனுப்பி வருகின்றார்.
யிவு நகரம் இரண்டு ஆண்டுகளுக்கும் முன் உண்மையாகவே வளரத் துவங்கியது. நவீன கருவிகள் இருப்பதானால், 30-40 தொழிலாளர்களை மட்டும் கூலிக்கு அழைத்துள்ளேன். ஆண்டுதோறும் 15 லட்சம் செருப்புகள் தயாரிக்கப்படுகின்றன என்று 22வயதான சீன பெண் தொழில்முனைவோர் லோ லி பிங் தெரிவித்தார். அவர் தந்தையிடமிருந்து பணம் வாங்கி, தமது அலுவலை துவக்கினார். அவருடைய தந்தை ஒரு போக்குவரத்து கம்பெனியை நடத்துகின்றார். இந்த உலகம் அவ்வளவு அமைதியாக இல்லை, ஆனால், சீனாமீது நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றார் லோ லி பிங். ரான்ஸ் செய்தி நிறுவனம் இதை அறிவித்தது. 1 2
|