• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-11 18:49:47    
உடல் பயற்சி பழகும் சீன மகளிர்

cri
வாழ்க்கை நிலை உயர உயர, சீன பெண்கள் தங்களுடைய தோற்றத்தில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். நல்ல உடல் நலனும் ஒல்லியான உருவமும், மேலும் அழகானது என்று பெரும்பாலோர் கருதுகின்றனர்.

தென்மேற்கு சீனாவிலுள்ள CHONG QING மாநகரில் வாழும் லியு லின் அம்மையார், மூன்று திங்களுக்கு முன் குழந்தை பெற்றார். முன்பை விட, குண்டாகி விட்டார். புதிய உருவத்தைக் கண்டு கவலைப்பட்ட அவர், அண்மையில் ஒரு மகளிர் உடல் நல பயிற்சியகத்தில் பதிவு செய்து, சில திங்களில் எடையைக் குறைக்க ஏற்பாடு செய்தார். அவர் கூறியதாவது

 

சில திங்களுக்கு பின் நான் வேலைக்குச் செல்லத் துவங்குவேன். பணிக்கு திரும்பும் முன்பு, உருவத்தைச் சரிப்படுத்த வேண்டும். நல்ல உடல் திறன் இருந்தால் தான், வேலை செய்யும் போது உற்சாகமாக இருக்கும். பணியில் வெகுவிரைவாக கவனம் செலுத்த முடியும் என்றார் அவர்.

தற்போது, வாரம் ஒரு முறை, லியு லின் உடல் பயிற்சியகத்துக்குச் சென்று, கட்டுக் குலையாமல் உடலை வைத்திருக்க உதவும் உடல் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றார். விளையாட்டு வடிவில் இந்தப் பயிற்சி தரப்படுகிறது. இது, சீன மகளிரிடையில் சில ஆண்டுகளாக பிரபலமாக விளங்கி வருகிறது. இந்த உடல் பயிற்சி பாடம், உடல் பயிற்சியகத்தில் விளக்கப்படுவதோடு, பெண்கள் வீட்டில் இருந்தே பயிற்சி செய்வதற்கு வசதியாக, பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காட்டப்படுகிறது.

1  2