• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-11 18:49:47    
உடல் பயற்சி பழகும் சீன மகளிர்

cri

அத்துடன், கடந்த சில ஆண்டுகளில், சீன மருத்துவ மசாஜ் மற்றும் பத்திய உணவு இணைந்த எடைக் குறைவு வழிமுறை, படிப்படியாக பிரபலமாக விளங்குகிறது. இந்த வழிமுறையில், உணவுப்பத்தியம் கடைப்பிடித்து, மசாஜ் செய்வதன் மூலம், உடலில் உணவு சத்தாக மாற்றும் தன்மை மேம்பட்டு, கொழுப்பின் கட்டமைப்பை குறைக்கும் என்று, நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஷாங்காய் மாநகரிலுள்ள இயற்கை அழகு என்ற அழகு கூட்டத்தில் இந்த எடைக்குறைவு பயிற்சி உள்ளது. LI WEN HUA என்னும் பெண், இதன் உறுப்பினர்களில் ஒருவர். சிவப்பு முகமும், உயரமான உருவமுடைய அவர், ஒரு ஆண்டுக்கு முன்பு கொழுப்புச் சேர்ந்து தாம் குண்டாக இருந்ததாக செய்தியாளரிடம் கூறினார்.

என்னுடைய எடையைக் குறைக்க உதவும் பொருட்டு, பழங்கள், காய்கறிகள் ஆகிய நார்ச் சத்து நிறைந்த உணவுகளைத் திண்ண வேண்டும். தவிர, 40 அல்லது 50 நிமிடம் படம் கையாளப்பட்டது. செடியிலிருந்து பிழங்கிய எண்ணெய் உடலில் வர்ணம் பூசி மசாச்சி செய்தது. இதுவே பயனுள்ளதாக இருக்கிறது என்றார் LI WEN HUA.

ஒரு ஆண்டு காலமாக தொடர்ந்து இதைச் செய்தார். துவக்க காலத்தில், 3 நாட்களுக்கு ஒரு முறை, இப்போது, வாரத்துக்கு ஒரு முறை. இந்த எடைக்குறைவு திட்டத்திற்கு, ஒரு முறைக்கு, குறைந்தது பத்து முதல், ஏன் ஆயிரம் யுவானுக்கும் கூடுதலாக கூட செலவு பிடிக்கிறது. ஆனால், சீன மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதால், பலரைப் பொறுத்த வரை, இந்த செலவு ஒரு பிரச்சினையில்லை.

தற்போது, மக்களுக்கு பல்வேறு வகையான பொருட்கள் கிடைக்கின்றன. இவை, உடல் நலனை மிகவும் கெடுக்கின்றன. இதனால், உடல் நலம், அழகு ஆகியவற்றில் முதலீடு செய்வது மிகவும் தகுதியான செலவுதான் என்று, ZHE JIANG மாநிலத்தின் RUI AN நகரத்தின் HE XIU HONG அம்மையார் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இச்சந்தையிலான பெரிய உள்ளாற்றல் இருப்பதைக் கருத்தில் கொண்டு, HE XIU HONG, மகளிர் உடல் நல பொழுது போக்கு அகத்தை திறந்துள்ளார். உடல் நலத்தைப் பெற, இங்கு சென்றுள்ளோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடல் பயிற்சியில் ஈடுபடுவதோடு, பலர் தமது உடல் எடையையும்க் குறைத்தனர். உரிய உடற்பயிற்சி, போதுமான தூக்கம், சரியான சாப்பாடு ஆகியவற்றில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.


1  2