• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-17 08:51:02    
உ லுங் தேநீர்

cri

சியாமென் நகர் தென் கிழக்கு சீனாவின் கடலோரத்தில் அமைந்துள்ளது. அதன் உயரிய வாழ்க்கைச் சூழல், பழமை வாய்ந்த பண்பாட்டுச் சிறப்பு, இயற்கைக் காட்சி ஆகியவை பயணிகளின் மனதை மிகவும் கொள்கை கொள்கிறது. அப்படியிருக்க, நீங்கள் பயணத்தின் போது சியாமென் தேநீரகத்துக்குச் சென்று ஒரு கோப்பை தேநீரை அருந்தினால் இந்நகரின் தனிச்சிறப்பையும் தொடர்புடைய தேநீர் பண்பாட்டையும் உணர்ந்து கொள்ள முடியும்.

தேநீர் குடிப்பது, சியாமென் மக்களின் வாழ்க்கையில் பொதுவான ஒரு வழக்கமாகும். பலர் காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடனே பின் செய்யும் முதலாவது காரியம், தேநீர் தயாரிப்பது. தேயிலை சியாமென் வட்டார மொழியான மின்நான் மொழியில் தேயிலை தூள் என்று அழைக்கப்படுகிறது. தேநீர், அரிசி போல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பொருள். விருந்தினர் வீட்டுக்கு வரும் போது அவர்களுக்கு தேநீர் வழங்கி உபசரிப்பர்.

உ லுங் தேநீரைக் குடிப்பது சியாமென் மக்களுக்கு முகவும் விருப்பமானது. இந்தத் தேநீர், பச்சை தேயிலை மற்றும் கறுப்பு தேயிலை உற்பத்தி முறையை ஆராய்ந்து கலந்து செய்யப்பட்டதாகும். ஆகவே அது கறுப்பு தேநீரின் சிறப்பையும் பச்சை தேநீரின் நறுமணத்தையும் கொண்டிருக்கிறது. உ லுங் தேநீர், உடல் கொழுப்பைச் சிதைத்து, பருமனைக் குறைத்து, அழகுப்படுத்தும் மருத்துவ பண்பைக் கொண்டிருக்கிறது. ஜப்பானில் இது அழகுப்படுத்தும் தேநீர் என அழைக்கப்படுகிறது.

உ லுங் தேநீர் பற்றிய கதை ஒன்று பொது மக்களிடையில் பரவியுள்ளது. 17ஆம் நூற்றாண்டு கால சிங் வமிச காலத்தின் யொங் செங் ஆட்சிக்காலத்தில் இது நிகழ்ந்தது. புச்சியென் மாநிலத்து ஆன் சி மாவட்டத்தில் சூ லுங் எனும் தேயிலை விவசாயி ஒருவர் இருந்தார். அவர் திடக்காத்திரமாகவும் கறுப்பாகவும் இருந்தார். அவரை உ லுங் என மக்கள் அழைப்பர். ஒரு வசந்தகாலத்தில் உ லுங் மலை ஏறி தேயிலையை பறித்தார். நண்பகலில் ஒரு வகை மான் திடீரென அவர் அருகில் ஓடோடி வந்தது. உ லுங் உடனே வேட்டைத் துப்பாக்கியால் அதைச் சுட்டுக் கொன்றார். அவர் வீடு திரும்பும் போது அந்தி வேளையாகி விட்டது. அவர் தனது குடும்பத்தினருடன் மானைச் சமைத்து அவசர அவசரமாக சுவைத்தார். தேநீர் தயாரிக்கும் வேலையை அறவே மறந்துவிட்டார்.

அடுத்த நாள் அதி காலையில் குடும்பத்தினர் அனைவரும் முந்திய நாள் பறித் தெடுத்த தேயிலையை வறுத்த போது நறு மணம் வீசியது. முந்திய கசப்பு காணாமல் போய் விட்டது. பின்னர் அவர் குடும்பத்தினர் அனைவரும் மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்து தரமிக்க உ லுங் தேயிலையை உருவாக்கியுள்ளனர். அவருடைய ஊரான ஆன் சி, உ லுங் தேநீரின் பிறந்த ஊராகி விட்டது.

1  2