• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-17 08:51:02    
உ லுங் தேநீர்

cri

சியாமென் நகரில் தேநீர் விடுதிகள் எங்கெங்கும் காணப்படுகின்றன. இங்கு ஆழ்ந்த தேநீர் பண்பாடு அடிப்படையைக் கொண்டிருப்பதால், ஒவ்வொரு தேநீர் விடுதியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இருந்தும் பயணிகளை ஈர்க்கும் தேநீரங்கள் பெரும்பாலும் சிறியவையாக உள்ளன. ஒரு சிறிய தேநீரகத்தை நடத்தும் ஊ சியாங் தொங் என்பவர் கூறியதாவது—

"நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள புகழ்பெற்ற தேயிலைகள் எங்கள் தேநீரகத்தில் உண்டு. எங்கள் தேநீரகம் பெரிய தேநீரகம் போன்ற உணர்வை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. அது சுகமாக இருக்கிறது" என்றார் அவர்.

சியாமென் நகரிலுள்ள பல சிறிய தேநீரகங்களில் தேநீரை அருந்தும் போதே கதையைக் கேட்டு ரசிக்கவும் முடியும். கதை சொல்வோர் கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டவாறு, தேநீரை அருந்தும் அதே வேளையில் கதை சொல்வர். இங்கு வருகை தரும் விருந்தினர்கள் பெரும்பாலோர் நிரந்தரமான விருந்தினர்களாவர். கதை சொல்வோர் கதையை சொல்லும் போது அவர்கள் இங்கு வந்து கதையைக் கேட்டு ரசிப்பர். இல்லாவிட்டால் அவர்கள் இங்கு வந்து கலந்து பேசுவர் என்று ஊ சியாங் தொங் கூறினார். ஒரு கூட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் சியொங் செங் செங் என்பவர் சிங் தெங் எனும் ஒரு சிறிய தேநீரகத்துக்கு வருகை தருவார். அவர் கூறியதாவது—

"வாய்ப்பு நேரிடும் போது தேநீரகத்துக்கு வர நான் விரும்புகிறேன். இங்கு இயற்கை காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். சேவகிகளின் தேநீர் தயாரிப்புக் கலையை கண்டுகளிக்கலாம். கதையையும் கேட்டு ரசிக்கலாம். பகலில் வணிக அலுவலுக்காக பேச்சுவார்த்தை நடத்தலாம். அத்துடன் இந்த அமைதியான சுற்றுச்சூழலில் நண்பர்களுடன் கலந்துரையாடலாம். தேநீரகத்தில் எதை பேச விரும்புகிறோமோ அதை பற்றி தாராளமாக பேசலாம்" என்றார் அவர்.

சியாமெனின் சிறு தேநீரகத்துக்கு வெளி நாட்டு நண்பர்களும் அடிக்கடி வருகை தருவதுண்டு. அவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். சில ஆப்பிரிக்க பயணிகளும் இங்கு வருகை தந்தனர். சில அந்நிய பயணிகள் தேநீரகத்தின் உரிமையாளரின் வழிகாட்டலில் தாமாகவே உ லுங் தேநீரை தயாரிக்க முயல்வதுண்டு. சியாமெனின் சிறு தேநீரகம், பழங்கலைப் பொருள் போன்றது. ஸ்விட்சுலாந்து நாட்டைச் சேர்ந்த செல்வி க்ரான்தியா பெல் தேநீரகத்தில் தேநீரை அருந்தும் போது, தான் தேநீரை சுவை பார்க்கும் அக்கறையை உணர்ந்து கொள்ளலாம் என்று கூறினார். அவர் கூறியதாவது—

"இந்த தேநீரகத்துக்கு வந்து தேநீரை அருந்துவது எனக்கு முதல் முறையாகும். முன்பு பலவற்றுக்குச் சென்றேன். ஆனால் இந்தத் தேரீரகத்தைத் தான் மிகவும் விரும்புகிறேன். அதன் பழமை வாய்ந்த அலங்காரத்தை விரும்புகிறேன். தவிரவும் தேநீரகத்தின் சுற்றுச்சூழலும் மிகவும் சிறப்பாக உள்ளது" என்றார் அவர்.

உ லுங் தேநீர் சியாமென் மக்களின் வாழ்க்கையில் ஊடுருவிச் சென்றுள்ளது என்று கூறலாம். ஒரு குடுவை தேநீரை தயாரித்து சில நண்பர்களுடன் குடித்தவாறே கலந்து பேசி ஆறுதலாக இருப்பது, பல சியாமென் மக்களின் மிகவும் மகிழ்ச்சிகரமான நுகர்வாகும்.

நேயர்களே, உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது சியாமென் நகருக்கு வந்து, எழில் மிக்க இயற்கை காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். தவிரவும் தேநீரகத்துக்குச் சென்று தேநீரை அருந்த வேண்டும். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.


1  2