இவ்வாண்டு, சீன-ஜப்பான் மகளிர் மலை ஏற்றக்குழு ஜோல்மோ லுங்மா சிகரத்தை எட்டியதன் 30வது ஆண்டு நிறைவாகும். இதனை முன்னிட்டு, இவ்வாண்டின் வசந்த காலத்தில் சீனா, ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளின் மகளிர் மலை ஏற்றக்குழுவினர்கள் ஜோல்மோ லுங்மா சிகரத்தில் மீண்டும் ஏறவுள்ளனர். ஜோல்மோ லுங்மா சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவிடும் பொறுப்பை அவர்கள் ஏற்பர்.
திபெத்தினத்தைச் சேர்ந்த ஜிஜி, லாஜி, பபுசோகா, சான்முலா, குய்சான் ஆகியோர் சீன அணியில் இடம்பெறுகின்றனர். கடந்த ஆண்டின் முதல் பாதி முதல், அவர்கள் பயிற்சியைத் துவக்கியுள்ளனர். மலை ஏறுதல், தட களம், பந்தாட்டம், முதலிய பயிற்சிகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர். தற்போது, அவர்களின் உடல் நலம் சிறந்த நிலையில் இருக்கின்றது.
சீன திபெத் தன்னாட்சி பிரதேசத்து மலை ஏற்றச்சங்கமும், ஜப்பானிய மலை ஏற்றச்சங்கமும் இந்நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கின்றன. 2005ஆம் ஆண்டு மார்சு முதல் ஜுன் வரை இந்த மலையேற்றம் தொடரும். ஜோல்மோ லுங்மா சிகரத்தின் வடக்கு வழி மூலம் அவர்கள் ஏறுவார்கள். மே திங்களின் பிற்பாதியில் சிகரத்தை எட்டுவார்கள். இரண்டு நாடுகளும் தலா 8 வீராங்கனை அனுப்பியுள்ளன. தவிர, திபெத் மலை ஏற்றச் சங்கம் 20 மலை ஏற்ற ஒத்துழைப்பு பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளது. ஹாங்காங், மக்கௌ, தைவான் ஆகிய பிரதேசங்களிலிருந்து வந்த வீரர்களும், பணியாளர்களும் உட்பட, இந்த குழுவில் மொத்தம் 60 பேர் இடம்பெறுகின்றனர்.
ஜிஜி என்பவர் சீன அணியின் தலைவராவார். ஜோல்மோ லுங்மா சிகரம் உட்பட கடல் மட்டத்திலிருந்து 8000 மீட்டர் உயரத்திலுள்ள 3 சிகரங்களை எட்டியுள்ளனர். ஜோல்மோ லுங்மா சிகரத்தை எட்டிவிட முடியும் நானும் என் அணியாளர்களும் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாட்டுக் கொடியை சிகரத்தில் ஏற்றி, சிகரத்தின் உயரத்தை அளவிடும் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்றார் அவர்.
1 2
|