குய்சான் என்பவர் இவ்வாண்டு 47 வயது நிரம்பியவர். அவரும் கடல் மட்டத்திலிருந்து 8000 மீட்டர் உயரமுடைய 3 சிகரங்களை எட்டினார். 2002ஆம் ஆண்டு, அவருடைய தலைமையில், சீன-ஜப்பான் மகளிர் மலை ஏற்றக்குழு உலகின் 6வது சிகரமான சொஓல்யு சிகரத்தை ஏட்டியது.
இந்நடவடிக்கையில் கலந்து கொள்ளும் 5 திபெத்தின வீராங்கனைகளும் ஜோல்மோ லுங்மா சிகரம் உள்ளிட்ட சில சிகரங்களை முன்பு வெற்றிகரமாக எட்டியுள்ளனர். உடல் ஆற்றல், மலை ஏற்ற அனுபவம், தொழில் நுட்பம் முதலியவற்றில் ஆற்றல் மிக்கவர் என்று திபெத் மலை ஏற்றக்குழுத் தலைவர் சான்சு விளக்கிக் கூறினார்.
1975ஆம் ஆண்டு மே திங்கள், ஜப்பானிய வீராங்கனை Tabei Jyunkoவும் சீன வீராங்கனை பான்தொவும் அடுத்தடுத்து, ஜோல்மோ லுங்மா சிகரத்தின் தெற்கு வழியிலும் வடக்கு வழியிலும் சிகரத்தின் உச்சியில் ஏறி, உலக மகளிர் மலை ஏற்ற வீரர்களின் வரிசையில் இடம்பெற்றனர். இரு நாட்டு மகளிருக்கும் மாபெரும் பெருமையும் சேர்த்துள்ளனர். 1 2
|