• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-17 22:32:42    
சீனாவின் 10 முக்கிய அறிவியல் சாதனைகள்

cri

ஒரு விநாடியில் 10 லட்சம் கோடி பிஃளாப் பணிகளைச் செய்யும் சூப்பர் கணிணி கடந்த ஆண்டு சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது. டானிங் 4000 ஏ என்று பெயரிடப்பட்ட இந்த சூப்பர் கணிணியின் உருவாக்கம் தான் 2004ம் ஆண்டில் சீனாவின் மிக உயர்வான அறிவியல் சாதனையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் முடிவடைந்ததும் அந்த ஆண்டின் சிறப்பான அறிவியல் பணிகள் பற்றி மதிப்பிடுவதற்காக சீனாவில் உள்ள மேல்மட்ட அறிவியல் அறிஞர்களும் பொறியாளர்களும் 10 முக்கியமான சாதனைகள் பற்றி வாக்களித்துத் தெரிவு செய்கின்றனர். இந்த வல்லுநர் குழுவில் சீன அறிவியல் அகாடமி மற்றும் சீனப் பொறியாளர் அகாடமியைச் சேர்ந்த 584 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த இரட்டைக் கழகங்கள் சீனாவின் அறிவியல் உலகில் மிகவும் புகழ் பெற்றவை. ஆகவே இவற்றின் உறுப்பினர்களிடம் 2004ம் ஆண்டின் சிறப்பான அறிவியல் சாதனைகள் பற்றித் தீர்மானிக்கும் படி கூறப்பட்டது. இவர்கள் தேர்ந்தெடுத்த சாதனைகள் சர்வதேசத் தரங்களுக்கு ஏற்றவையாக உள்ளனவா என்று மதிப்பிடப்பட்டது.

இந்த அறிவியல் வல்லுநர் குழு தெரிவு செய்துள்ள மிகச் சிறப்பான 10 சாதனைகளில் பெரும்பானவை மக்களின் அன்றாடப் பொருளாதார வாழ்க்கையுடன் தொடர்புடையவை என்று சீன அறிவியல் அகாடமியின் தலைவர் லு யோங் சியாங் கூறினார். இந்த 10 முக்கிய சாதனைகளில் முதலிடம் பெறுவது ஷாங்கை சூப்பர் கம்ப்யூட்டர் மையம் மற்றும் சி ஏ எஸ் கணிணி நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள புதிய சூப்பர் கணிணி DAWNING 4000 எல் என்று பெயரிடப்படுள்ள இந்தக் கணிணி ஒரு விநாடியில் 10 லட்சம் கோடிபஃளாப் பணிகளைச் செய்யும் திறன் பெற்றது. சர்வதேச அளவில் 10வது இடம் பெற்றுள்ள இந்தக் கணிணியை உருவாக்கியதன் மூலம் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக சூப்பர் கணிணி தயாரிப்பில் மூன்றாவது இடத்தை சீனா பெற்றுவிட்டது.

2003ம் ஆண்டிலும் சூப்பர் கணிணி தயாரிப்பு தான் முதலிடம் பெற்றது. அப்போது DAWNING 4000 A என்ற கணிணி ஒரு விநாடியில் 3 லட்சம் கோடி பிஃளாப் பணிகளைச் செய்யக் கூடியதாக உருவாக்கப்பட்டது.
1  2