• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Apr 10th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-17 22:32:42    
சீனாவின் 10 முக்கிய அறிவியல் சாதனைகள்

cri

அறிவியல் சாதனையில் இரண்டாவது இடம் முதன் முதலாக உள்நாட்டிலேயே வடிவமைத்து கிழக்கு சீனாவின் செச்சியாங் மாநித்தின் சின் ஷான் நகரில் நிறுவப்பட்டு வணிகரீதியில் மின்சார உற்பத்தியைத் தொடங்கிவிட்ட அணு மின்சார ஆலைக்குத் தரப்பட்டுள்ளது. மூன்றாவது இடம் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்வதற்காக 4000 கி.மீ.தொலைவுக்கு கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள குழாய்ப் பாதைக்கு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டின் 10 முக்கிய அறிவியல் சாதனைகளில் முதல் மூன்றும் சீனாவின் எரிசக்தித் துறையுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத் தக்கது. நாட்டின் எரிசக்தித் தேவையில் சீன அறிவியல் அறிஞர்கள் அக்கறை கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுவதாக சீனப் பொறியாளர் அகாடமியின் தலைவர் சியு குவாண்டி தெரிவித்தார்.

சீனாவின் வேதியியல் கழகத்தைச் சேர்ந்த சியான் லேய் என்பவரின் தலைமையிலான அறிவியல் அறிஞர்கள் குழு'நேநோ சுவிட்ச்'என்ற ஒரு கருவியை உருவாக்கியுள்ளது. நேநோ நுட்பம் என்பது மிகவும் துல்லியமாக அளவிடக் கூடிய ஒரு முறையாகும். அதாவது ஒரு மைக்ரோ மீட்டரில் ஓராயிரமாவது அளவு தான் ஒரு நேநோ மீட்டர் எனப்படுகின்றது. இப்போது தயாரிக்கப்பட்டுள்ள நேநோ சுவிட்சீ ஒளிவிடும் விளக்கை மாற்றுவதன் மூலம் ஈர எதிர்ப்புத் திறன் உள்ள துத்த ஆஸ்ஸைடை ஈரத்தை ஈர்க்கும் திறனுடையதாக மாற்றும் வல்லமை பெற்றது. இது மருந்து தயாரிப்பிலும் உயிரி நுட்ப ஆராய்ச்சியிலும் பேருதவியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாண்டுகளாக இந்த நேநோ நுட்பம் 10 முக்கிய ஆராய்ச்சிகளில் ஒன்றாக இடம் பெற்று வருகின்றது.

கடந்த ஆண்டின் மற்றொரு முக்கியமான அறிவியல் ஆராய்ச்சி உணவு சம்பந்தப்பட்டது. பசளைக் கீரைரயின் தாவர அமைப்பு நுட்பம் பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. பசுமையான தாவரங்களின் ஒளிச் சேர்க்கையில் முக்கிய பங்காற்றக் கூடிய LHC-இரண்டு எனப்படும் புரதச்சத்து தொகுப்பின் கட்டமைப்பை சீன அறிவியல் ஆய்வாளர்கள் வரைந்துள்ளனர். இது தாவரங்களின் ஒளிச் சேர்க்கையைபர் புரிந்து கொள்ள உதவும். குறிப்பாக பூமியின் வேதியியல் எதிர்வினை மூலம் செயற்கையாக ஒளிச் சேர்க்கை நடைபெற முடியும். இது சூரிய ஆற்றலை மிகவும் திறம்பட பயன்படுத்துவதற்கு உதவும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அறிவியல் தொழில் நுட்ப ஆதிக்கத்தில் தான் எதிர்காலம் உள்ளது என்பதைப் புரிந்து கொண்டுள்ள சீன அரசு ஆயிரக் கணக்கான கோடி யுவான்களை ஆராய்ச்சிப் பணிகளில் செலவிட்டு வருகின்றது.

1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040