உலகில் எண்ணற்ற கம்பீரமான விந்தையான மலைகள் உள்ளன. ஆனால், மனித குலத்தின் மனதில் சுமுலும்மா சிகரம் மிகவும் உன்னதமாகவும் புனிதமாகவும் இடம்பெற்றுள்ளன. ஆனால் கடந்த நூற்றாண்டின் 50ஆம் ஆண்டுகளில் முதல் முறையாக மனித குலம் இச்சிகரத்தை எட்டியது முதல், இன்று வரையான அரை நூற்றாண்டில், மனித குலத்தினால் ஏற்பட்ட குப்பை கூளங்கள் இந்த புனிதமான தூய்மையான மலைச்சிகரத்தை மாசுப்படுத்தி வருகின்றன. சுமுலும்மா சிகரத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக, சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொண்டர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
2004ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 10ஆம் நாள், சுமுலும்மா சிகரத்தைப் பாதுகாக்க, சீன வரலாற்றில் மிகப் பெரிய அரசு சாரா சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொண்டர் குழு, கடல் மட்டத்திலிருந்து 5200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சுமுலும்மா சிகரத்தின் ஆதார முகாமைச் சென்றடைந்தது. இந்தக் குழுவில் 28 உறுப்பினர்கள் இருந்தனர். சுமுலும்மா சிகரத்துக்கான சுமுலும்மா சிகரத்தைத் துப்புரவு செய்வது இவர்களின் பொறுப்பாகும்.
அங்கு, சுற்றுலா பயணிகள் விட்டுச் சென்ற பாழடைந்த கூடாரங்கள், தூக்கப் பைகள், ஆக்சிஜன் பொட்டலங்கள் உள்ளிட்ட குப்பை கூளங்கள், அவர்கள் நினைத்ததை விட அதிகமாக இருந்தன. அவர்களுக்கு அதிர்ச்சி தரக் கூடியவை. குளிரான வறட்சியான சுமுலும்மா சிகரத்தில், இந்த குப்பை கூளங்கள் இயற்கையாக அழிவதற்கு ஆயிரம் ஆண்டுகாலம் தேவைப்படும் என்பது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
பல தொண்டர்கள் சமவெளி பிரதேசங்களிலிருந்து வருவதால், உயர் கடல் மட்டத்திற்கு மேலே வெகு உயரத்திலுள்ள சுற்றுச்சூழலுக்கு ஏற்ப, குறுகிய நேரத்தில் தங்களை மாற்றிக் கொள்வது சிரமம். விரைவில் இளம் பெண் தொண்டர் லியு சியாவ் லின், காற்று குறைவு நோயினால் பீடிக்கப்பட்டார்.
"திடீரென்று எனக்கு சிரமம் ஏற்பட்டது. எனக்கு இரைப்பை வலித்தது. அப்போது கண்ணீர் வழிந்தது. இந்த நடவடிக்கையில் பங்கெடுத்து, பெருமையுடன் கூடிய பொறுப்பை உணரும் போது, வலி மறக்கப்படுகிறது. ஆனால் ஓய்வு எடுத்த போது, இரைப்பை வலி உணர்ந்தேன்" என்றார் அவர்.
1 2 3
|