
மொத்தம் 7 நாட்களில் இந்த தொண்டர்கள் சுமுலும்மா சிகரத்தில் 8 டன் குப்பை கூளங்களை திரட்டினர். பெரும்பாலான குப்பை கூளங்கள் திபெத்திலுள்ள கழிவு அகற்றும் தொழிற்சாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டு கையாளப்பட்டன. சில பகுதி கூளங்களை அவர்கள் பெய்ஜிங்கிற்கு திருப்பி ஏற்றிச் சென்றனர். பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்சோவில் காட்சிக்கு வைத்துள்ளனர்.
அவர்கள் லாசா நகரிலிருந்து பெய்ஜிங்கிற்குத் திரும்பிய நாள், சுமுலும்மா சிகரம் இயற்கை புகலிடம் என்று முன்னாள் சீன அரசு தலைவர் ஜியாங் சே மின் சாசனம் எழுதிய எல்லை கல் திபெத்தின் Ding Ri வட்டத்தில் நடப்பட்டது. சுமுலும்மா சிகர பிரதேசத்திலுள்ள சூழலைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தி, அதை உலகில் மிகவும் தூய்மையான இடமாக மாற்றுவதற்காக, திட்டப்படி, அடுத்த சில ஆண்டுகளில், சீன அரசு ஆயிரக்கணக்கான சுற்றுச்சூழல் நிபுணர்களை அங்கு அனுப்பும்.
அண்மையில் எமது செய்தியாளர் சியு ச்சி வெயை மீண்டும் சந்தித்தார். இன்னொரு விருப்பத்தை தொண்டர்கள் நிறைவேற்ற விரும்புகின்றனர். அதாவது, மீண்டும் சுமுலும்மா சிகரத்துக்குச் சென்று குப்பை கூளங்களைத் துப்புரவு செய்ய விரும்புகின்றனர். இதனால், 2008ஆம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பெய்ஜிங்கில் நடைபெறும் போது, தூய்மையான அழகான சுமுலும்மா சிகரம் உலகதுக்கு வழங்கப்படும்.
"அடுத்த ஆண்டு மேலும் அதிக உயரத்தில், அதாவது, சுமார் 7000 மீட்டர் உயரத்தில் குப்பை கூளங்களை திரட்டுவதென நாங்கள் திட்டமிடுகிறோம். 2008ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டிலும் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வோம். 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான தீப்பந்தம் சுமுலும்மா சிகரத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும். எனவே அதற்கு முன்பாக சுமுலும்மா சிகரத்துக்கு தூய்மையான சூழலை உருவாக்க வேண்டும்" என்றார் அவர்.
1 2 3
|