இந்த கட்டுரையில் செய்தியாளருக்கும் உலக வங்கியின் துணை இயக்குநர் கேரனுக்குமிடையிலான உடைராடல் இடம் பறுகின்றது
செய்தியாளர்.... நீங்கள் 2020ம் ஆண்டு சீனா என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை 1997ல் வெளியிட்டீர்கள். அதில் 1997ல் போர்த்துக்கல் அடைந்த வளமான நிலையை சீனா 2020ம் ஆண்டில் அடையலாம். அதாவது அப்போது சீன மக்களின் சராசரி மொத்த தேசிய உற்பத்தி மதிப்பு 10 ஆயிரம் அமெரிக்க டாலரை எட்ட கூடும் என்று குறிப்பிட்டீர்கள். இது நடப்பு சராசரி தனிநபர் வருமானத்தின் மதிப்பிலான 1000 அமெரிக்க டாலரை விட 10 மடங்கு கூடுதலாகும். இந்த மதிப்பீடு சபிகானா?
கேரன்.....ஆமாம். 2020வரை இந்த விதியின் பயன்பாடு தொடரும். அப்போது சீனா போர்த்துக்கலின் நிலையை தாண்டுவது திண்ணம் என்று நம்புகின்றேன்.
செய்தியாளர்.....2017ம் ஆண்டுக்கு பின் சீனா அமெரிக்காவைத் தாண்டி உலகில் முதலாவது பொருளாதார கூட்டணியாக மாறும் என்று உலக வங்கியின் இயக்குநர் வொல்பஃன்சன் கடந்த ஆண்டு மே திங்களில் குறிப்பிட்டார். அவரை போல உங்களுக்கும் நம்பிக்கை உண்டா?
கேரன்.......ஒரு நாட்டின் பொருளாதார சக்தியை கணக்கிட்டுப் பார்க்கும் வழி முறையில் சார்ந்திருக்கும். அந்நிய செலாவணி மாற்று விகிதத்தை கணக்கிட்டுப் பார்த்தால் இந்த குறிக்கோளை நிறைவேற்றுவது கடினம். வாங்கும் ஆற்றலில் சராசரி குறிக்கோளை கணக்கிட்டுப் பார்த்தால் சீனா 2017ம் ஆண்டில் அமெரிக்காவை தாண்டக் கூடும். பல சரக்குகளும் சேவைகளும் சர்வதேச சந்தையில் விலைபோக வில்லை. ஆகவே வெவ்வேறான நாடுகளின் விலை விகித்தில் பெரிய இடைவெளி இருக்கின்றது. எடுத்துக்காட்டாக சீனாவில் தலைமுடி வெட்டும் சேவையின் கட்டணம் ஐரோப்பிய நாடுகள் ஜப்பான் ஆகியவற்றில் உள்ள கட்டணத்தை விட மிக குறைவானது. இந்த கட்டணக்க குறைவு காரணமாக சீன மக்களின் வாங்கும் ஆற்றல் வலிமையாகும். தற்போது சீனாவில் மக்களின் சராசரி தனிநபர் வருமானம் ஆயிரம் அமெரிக்க டாலராகும். சராசரி வாங்கும் ஆற்றலை கருத்தில் கொண்டால் இந்த எண்ணிக்கை 4000, அல்லது 5000 அமெரிக்க டாலராக உயரும். இப்படியே கணக்கிட்டுப் பார்த்தால் சீனப் பொருளாதாரத்தின் ஆற்றல் ஜப்பானைத் தாண்டிவிடும். அமெரிக்காவுடன் நெருங்கிவிடும். 2020ம் ஆண்டில் அயல்பாக இருந்தால் சீனப் பொருளாதார அளவு அமெரிக்காவின் அளவை தாண்டும்.
1 2
|