• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-22 08:22:57    
சீனர்களின் சராசரி மொத்த தேசிய உற்பத்தி-2020

cri

திசையை நோக்கி சீனா வளர்ச்சி.

செய்தியாளர்....... உலக வங்கியில் பணி புரிந்த போது சீனாவுக்கு எத்தனை முறை பயணம் மேற்கொண்டீர்கள்?

கேரன்...... மூன்று தடவை. பத்து ஆண்டுகளுக்கு முன் நான் பெய்சிங்கு வருகை தந்தேன். 2004ம் ஆண்டில் நான் பெய்சிங்கு மீண்டும் வந்தேன். சீனாவில் மாபெரும் மாற்றம் கண்டுள்ளேன்.

செய்தியாளர்......எந்த மாற்றம் உங்களுக்கு ஆச்சரியம் தருகின்றது?

கேரன்..... சீன அரசு அதிகாரிகளுடன் உரையைடும் போது எவ்வாறு சந்தை பொருளாதாரத்தை நிர்வகிப்பது என்பது பற்றி கருத்து வேற்றுமை இருந்த போதிலும் வளர்ச்சி திசை மிகவும் தென்படுகின்றது. அதவாவது சந்தை பொருளாதாரத்தில் ஈடுபடுவதாகும். பல நாடுகளில் இது காண்பது அரிது.

செய்தியாளர்......சீனா சந்தை பொருளாதார நாடாக இருக்கின்றதா

கேரன்......சீனாவின் சந்தையாக்கம் மனநிறைவு தருகின்றதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் பார்த்தால், சீனா இப்போது தெளிவாக சந்தை பொருளாதார நாடு என்ற நிலையை நோக்கி மாறிவருகின்றது. இந்த குறிக்கோளை நனவாக்குவதில் சீனாவுக்கு உதவுவதில் உலக வங்கிக்கு மிக மகிழ்ச்சி.

செய்தியாளர்......இது உங்கள் தூதாண்மை பேச்சா?

கேரன்...... சிரிப்பு.

செய்தியாளர்...... சீனாவின் சந்தை பொருளாதார தகுதி நிலையை முக்கிய மேலை நாடுகள் ஏற்றுக் கொள்ள சீனா எந்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்?

கேரன்.......சீனா இப்போது சில நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. எந்த வகை நிபந்தனைகளை சீனா ஏற்ற பின் அது சந்தை பொருளாதார நாடாக மாறும் என்பது பற்றி எனக்கு அவ்வளவு தெரிய வில்லை. இப்போது சீனா நிதி துறையிலான சீர்திருத்தம் மேற்கொண்டு இதை மேலும் சுதந்திரமாக்க முயற்சிக்கின்றது. இதில் கவனம் செலுத்த வேண்டும். நாணய சந்தையின் தாராளமாக்கம் வளருவதில் தவிர்க்க முடியாத வழிமுறை இருந்த போதிலும் பல நாடுகள் நிதி துறையில் சந்தையாக்க சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் போது நாணய நெருக்கடியை எதிர்நோக்கின. சீன நாணய துறை சந்தையாக்கத்தை படிபடியாக மேற்கொள்ள வேண்டும். அதேவேளையில் பல்வகை நாணய கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.


1  2