• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-22 08:39:13    
மனச் சோர்வு மாறும்

cri

மனம் இதை நீங்கள் யாராவது நேரில் பார்த்திருக்கிறீர்களா ? பார்த்திருக்க முடியாது. ஏனெனில் அது மனிதக் கண்களுக்குதச் தெரிவது இல்லை. நமது உடம்புக்குள் ஒளிந்து இருந்து கொண்டு அது நம்மை இயக்குகின்றது. " உனக்கு மனச் சாட்சி இருக்கா ? நெஞ்சைத் தொட்டுச் சொல்லு" என்று ஒரு வளரப் பார்த்துக் கேட்கிறோம். அதாவது மனம் என்ற உருவமற்ற பொருள் நமது நெஞ்சுக்குள் அல்லது இதயத்திற்கு உள்ளேதான் நனிந்து கொண்டிருக்கின்றது என்று நினைக்கிறோம். " உனக்கு அறிவிருக்கா" ? மரமண்டை என்று ஒருவரைத் திட்டுகிறோம். அதாவது அறிவு மூனையில் இருப்பதாக நினைப்பு. இந்த மனமும் அறிவும் இணைந்து செயல்பட்டு மனித உடம்பை இயக்குகின்றன. அறிவு பெருகப் பெருக நணம் விலிவடைந்து கொண்டே போகிறது. இதைத் தான் மனப்போக்கு என்கிறோம். மனம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தக் கூடியது. அறிவுப் பெருக்கத் தால் நண உணர்வுகள் மாறுபடுகின்றன.

நமது உடம்பில் வெப்பம் அதிகரித்து உடம்புக்குக் காய்ச்சல் ""

வருவது போல மனதுக்கும் காய்ச்சல் வருகின்றது. அதாவது மனதில் உணர்வுகளின் நெருக்கம் அதிகரிக்கும் போது மனம் சோர்ந்து விடுகின்றது. வெய்யிலில் வாடிவதங்கும் செடி போல துவண்டு விடுகின்றது. நம்மைப் பற்றி கவலைப்பட யாருமே இல்லை. நாம் தனித்து ஒதுக்கப்பட்டு விட்டோம் என்ற கழிவிரங்கம் மேலோங்கிவிடுகின்றது. இந்த மனச் சோர்வு மோசமாகும் போது " இனி உயிர் வாழ்ந்து என்ன பயன்?" என்ற எண்ணம் தலைதூக்கி தற்கொலைசெய்யும் அளவுக்கு தூண்டப்படுகின்றோம்.

இந்த மனச் சோர்வு நோயைக் குணப்படுத்த பல வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பொதுவாக மனநல மருந்துவர் ஒருவர் ஆலோசனை வழங்கி தெம்பாகப் பேசுவதன் மூலம் துவளும் மனதைத் தூக்கி நிறுத்த முடியும். ஆனால் சீனப் பாரம்பரிய மருத்துவ முறையில் சற்றே வித்தியாசமான அணுகு முறை பின்பற்றப்படுகின்றது. சீன மொழியில் மனம் என்பதை ச்சின் என்று சொல்கிறார்கள். மனச் சோர்வு மிக்கவர்களுக்கு அக்குபங்ச்சர் சிகிச்சையும் மூலிகை மருந்துகளும் தரப்படுகின்றது.
1  2