• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-22 08:39:13    
மனச் சோர்வு மாறும்

cri
சீனப் பாரம்பரிய மருத்துவத்தின் படி ச்சின் என்பது உடம்பில் ஒரு முக்கியமான உறுப்பு அதாவது உடம்பின் பேரரசன் என்று சொல்லாம் ஆன்மாவின் உறைவிடமான மனம் அதாவது ச்சின் ரத்த ஓட்டத்தை தூண்டுகின்றது. ச்சின் பாவ் (XIN BAO ) எனுனும் ஒரு சவ்வுப்படலம் ச்சின்னைப் பாதுகாக்கிறது.

இதை ஆங்கிலத்தில் PERICARDIUM என்பார்கள். இது பெய்சிங் நகரில் உள்ள PERICARDIUM நகர் போன்றது. பலத்த கட்டுக்காவலுடன் ரகசியத்தைப் பாதுகாப்பது அயல் சக்திகள் குறிப்பாக எதிலிடையான நணநிலை மனதைப் பாதிக்காமல் இது தடுக்கின்றது என்று XU WENBING என்ற மருத்துவர் கூறுகிறார். இந்த ச்சின் பாவ் தமிழில் நெஞ்சுக் குலை எனப்படுகின்றது. " உன் நெஞ்சுக்குலையை உகுந்துடுவேன்" என்று நமது கிராமத்தில் கோபத்தோடு சிலர் சொக்கலிப்பதை நீங்கள் கேட்டிருக்கலாம். அது புத்தயைத் தீட்டாமல் கத்தியைத் தீட்டும் பேச்சு. அது போகட்டும் விடுங்கள். நமக்கு முக்கியம் இந்த நெஞ்சுக் குலை இந்த நெஞ்சுக் குலை வலுவாக உறுதியாக இருக்குமானால் அயல் சக்திகள் மனதைப் பாதிக்காது. அதவேவேளையில் நீண்டகாலத்திற்கு மிகவும் தீவிரமான உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் நீடிக்குமானால் இந்த நெஞ்சுக்குலையின் செயல்பாட்டுக்கு ஊறு. உண்டாகிறது. இதயம் பாதிக்கப்பட்டு மனச் சோர்வு அல்லது வெறி ஏற்பட்டு விடுகின்றது. இவ்வாறு நெஞ்சுக்குலை பலவீனமடைவதற்கு மரபுவழிக் காரணங்களும் உண்டு. அல்லது நாமே உண்டாக்கிக் கொள்ளும் நிலைமைகளாலும் இது ஏற்படுகின்றது. இளம் வயதில் ஒருவருடைய தன்னம்ரிக்கையைக் குலைக்கும் வகையில் அவருடைய பெருமைக்கு ஊறு ஏற்படுமானால் பிற்காலத்தில் அவருடைய நெஞ்சுக்குலை பலவீனமடைந்து மனச் சோர்வு உண்டாகிறது. இதைக் குணப்படுத்துவதற்காக சீனப் பாரம்பரிய மருத்துவத்தின் படி இதயம் மற்றும் ஈரலுக்கு புது ரத்தம் பாய்ச்சப்படுகின்றது.

 இது மனம் ஆன்மா அல்லது உணர்வின் பௌதீக அடிப்படையை வலுப்படுத்தும் என்று நம்பப்படுகின்ரது. மேலும் தூக்கம் இன்மையும் இரவில் அடிக்கடி தூக்கம் கலையும் பிரச்சினைகளும் தீர்க்கப்படுகின்றன. தியானம் செய்வதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி வலுப்படுத்தும் அக்குபங்ச்சர் மூலமும் சிகிச்சை தரவும் சீன பாரம்பரிய மருத்துவ வழி சொல்கிறது.

1  2