• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-24 15:33:22    
குடிநீரின் பயன்பாடு

cri
எழுந்திருக்கும் போது ரத்த அழுத்தம் தீவிரமாக குறையுமானால் நீர் குடிப்பதன் மூலம் இந்த நிலைமையைச் சமாளிக்கலாம் என்று பிரிட்டிஷ் ராயல் மருத்துவ கல்விக் கழகத்தின் அறிவியல் அறிஞர்கள் அண்மையில் தெரிவித்துள்ளனர். ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனியின் சமநிலை நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது. ரத்த அழுத்தம் மாறுவது மக்களின் எண்ணத்தால் தீர்மானிக்கப்பட முடியாது. ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் நரம்பு மண்டலத்தில் சிலருக்கு இன்னல் உள்ளதால் உட்கார்ந்த நிலையிலிருந்து அல்லது படுத்த நிலையில் இருந்து கால்களை உயர்த்தி எழும்பி நிற்கும் போது அவர்களின் ரத்த அழுத்தம் தீவிரமாக தாழ்ந்திருக்கும். இதன் விளைவாக கால்கள் மரத்துப் போகும்.

நீர் குடித்தால் இத்தகைய நிலையில் ரத்த அழுத்தம் உயர்வதற்கு துணை புரியும். பலவகை காரணங்களால் நரம்பு மண்டலத்தால் ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 480 மில்லி லீட்டர் நீர் குடித்த பின் அவர்களுடைய ரத்த அழுத்தம் உயரும் என்று பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்த பின் முடிவுக்கு வந்துள்ளனர்.

நீர் குடிப்பதன் மூலம் நபம்பு மண்டலத்தால் ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலம் சீரடையும். மருந்து உட்கொள்வதற்குப் பதிலாக நீர் குடிப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் என்று இந்த ஆராய்ச்சிக்குப் பொறுப்பான பேராசிரியர் கலீஸ் டோபஃர் மத்தியாஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.

1  2