சீன ஊனமுற்றோர் கலைக் குழுவில் ஊமையர் நடிகை தைய் லி குவா 《ஆயிரம் கைகளை கொண்ட தேவி》எனும் நடனத்தில் முக்கிய பத்திரமாக வகிக்கின்றார்.
அவர் பிறந்த ஊர் சீனாவின் ஹுப்பேய் மாநிலத்தின் யி சான் நகராகும். 2 வயதில் பெரும் காய்ச்சல் கண்ட போது STREPTOMYCRN மருந்து ஊசி போட்டதன் காரணமாக அவள் கேட்கும் திறனை இழந்தாள். அன்றிலிருந்து சத்தம் இல்லாத உலகில் வாழ்கின்ற அவளுக்கு அப்போது எதுவும் தெரிய வில்லை.
5 வயதில் குழந்தை காப்பபகத்தில் சிறுவர்கள் மாறி மாறி கண்களை மூடி சத்தம் போட்டு விளையாடும் விளையாட்டில் கலந்து கொண்ட போது தான் மற்றவரிடமிருந்து தான் வேறுபட்டகள் என்ற உண்மையை அவள் உணர்ந்தாள். 7 வயதில் அவள் வாய்பேச முடியாதோர் துவக்க பள்ளியில் சேர்ந்து பயின்றாள்.
அந்தப் பள்ளியில் இத்தகைய மாணவர்களுக்கென சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. இதன் பெயர் நடுக்கம் என்பதாகும். அதாவது ஆசிரியர்கள் மரப் பலகை தரையில் வைக்கப்பட்ட யானை கால் மத்தளங்களில் கால் தட்டி எழுப்பிய ஒலி மூலம் மாணவர்களுக்கு தெரிவிக்கின்றனர். மத்தத்தின் நடுக்கம் சிறிய லி குவாவின் உடம்பில் நிறைந்தது.
1 2
|