அப்போது இன்பமான உணர்ச்சியினால் வசப்பட்டேன் என்று அவர் நமது செய்தியாளிடம் கூறினார். மரப் பலகை தரையில் பாய்ந்து முன்பு தெரியாத அழகான சத்தத்தை மனத்தால் கேட்டேன். அப்போது முதல் நடனம் தான் நான் காண கூடிய வண்ண இசையாகும். உள்ளத்திந் உணர்ச்சியை மற்றவரிடம் காட்டும் அருமையான மொழி நடனம் என்று அவர் உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.
தைய் லி குவா 15 வயதில் இருந்தே ஒழுங்கான முறையில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இசையைக் கேட்க முடியாதததால் ஆசிரியரின் சைகை தரும் உணர்ச்சி மூலம் ஆடுகிறார். பயிற்சி வகுப்பில் அடிக்கடி கீழே விழுந்து விடுவதன் காரணமாக உடம்பு காயமுற்றது. 1994ல் அவர் ஹுப்பே நுண்கலை கல்லூரியின் விளம்பர ஓவிய துறையில் தேர்வு வெற்றி பெற்று சேர்ந்தார். ஆசிரியர் சொன்னதை கேட்க முடியாத நிலையில் அவர் முதலாவது வரிசையில் உட்கார்ந்து கண்களால் ஆசியரிகளின் வாய் அசைவுகளைப் பார்த்து கல்வி கற்றார். வகுப்புக்குப் பின் சக மாணவர்களின் குறிப்பு புத்தகத்தை வாங்கி கற்றுகொண்டு அறிவை ஆழமாக்கினார். அயாரா உழைப்புடன் அவர் தலைசிறந்த மதிப்பெண் வாங்கி நுண்கலை துறை பாடத்தை முடித்து கொண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். அவர் வரைந்த மது விளம்பரத்திற்கு ஹுபேய் மாநிலத்தில் விருது வழங்கப்பட்டது.
இதுவரை தைய் லி குவா 30க்கும் அதிகமான நாடுகளில் அரங்கேற்றியுள்ளார். 2003ம் ஆண்டு கணிணி பொறியாளரைத் திருமணம் செய்து இன்பமான குடும்பத்தை நடத்தி வருகின்றார். கேட்கும் திறனை இழந்ததன் காரணமாக வாழ்க்கையில் இன்னல்கள் அதிகம். ஆனால் கலை உணர்வு இறுகலாகி மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் மொழியாக நடனம் மாறியுள்ளது. 1 2
|