• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-28 22:32:53    
லாசா நகரவாசியான Lang Zhen அம்மையார்

cri

Lang Zhen அம்மையார், திபெத்தில் பிறந்தவர். ஸாசா நிகரைச் சேர்ந்த அவருக்கு 9 சகோதரர்கள்-சகோதரிகள் உள்ளனர். குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடும் போது, மொத்தம் 60க்கும் அதிகமானோர் சேர்ந்து விடுகின்றனர். இது, இணக்கமான ஒரு பெரும் குடும்பமாகும். புத்தாண்டு என்றால், தம் குடும்பத்தைப் பொறுத்த வரை, புத்தாண்டில் மங்களத்தை வரவேற்கும் துவக்கம் மட்டுமல்ல, குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடும் அருமை நாளும் ஆகும். எனவே, திபெத்தின் புத்தாண்டு வரும் போதல்லாம், குடும்பத்தினர் அனைவரும் கவனமாக ஏற்பாடு செய்வர். அவர் கூறியதாவது

"திபெத் இன புத்தாண்டுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய இன சிறப்பியல்பு உண்டு. லாசாவில் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு பல நிகழ்ச்சிகள் உள்ளன. பல நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக ஏற்பாடு செய்ய வேண்டும். திபெத் இன கலண்டரின் படி டிசம்பர் திங்களின் துவக்கத்திலேயே மக்கள் பரபரப்பாக ஏற்பாடு செய்யத் துவங்குவர்" என்றார் அவர்.

திபெத் இன நாள்காட்டி டிசம்பர் 29ந் நாள், அதாவது பிப்ரவரி 7ந் நாளாகும். இவ்வாண்டு திபெத் இன புத்தாண்டுக்கான பல்வகை நிகழ்ச்சிகள் 7ந் நாள் துவங்கும். அன்றிரவு "Gu Tu" எனும் ஒருவகை உணவை உட்கொள்ள வேண்டும். திபெத் இனத்தவர், கடந்த ஓராண்டிலிருந்து பிரியா விடை பெறும் ஒரு வகை நிகழ்ச்சி, இதுவாகும். அன்று அதிகாலையிலேயே பெரியவர்கள், குழந்தைகள் அனைவரும் வீடு திரும்பி, உணவு உட்கொள்ள ஒன்று கூடி இருப்பர்".

"Gu Tu" என்றால், இறைச்சிக்கொழுக் கட்டை போன்ற ஒருவகை உணவுப்பொருளாகும். இதில் இறைச்சி தவிர, முள்ளங்கி துருவலும் உண்டு. இதை நுடுல்ஸுடன் சேர்த்து வேகவைத்த பின் சாப்பிடலாம். இது, திபெத் இன மக்களின் பாரம்பரியமான புத்தாண்டு இரவு உணவாகும்.


1  2