
சாங் ஜின் மீண்டும் மீண்டும் இந்த மாணவருடன் கலந்து பேசி அவருக்கு இடைவிடாமல் அறிவுறுத்துவார். அத்துடன் படிப்பு என்றாலும் வாழ்க்கை என்றாலும் மிக முக்கியமானது என்ன வென்றால் சுய நம்பிக்கை நிலைநாட்ட வேண்டும். இன்னல்களைச் சமாளிக்க முடியும் என்று நம்ப வேண்டும் என்றும் அவரிடம் சொன்னார். ஆசிரியை சாங் ஜினின் உதவியுடன் இம்மாணவர் இறுதியில் இன்னல்களிலிருந்து விடுபட்டு சக மாணவர்களுடன் அன்பாக பேசிப் பழகுகிறார் . அவருடைய மதிப்பெண்ணும் அதிகரித்துள்ளது.
மனோ பல கல்வி எல்லா கல்விக்கும் அடிப்படையாக திகழ்கின்றது. ஆகவே சிறு வயதிலிருந்து மாணவர்களுக்கு ஒரு சீரான மனோ பலத்தை பயிற்ற வேண்டும் என்று பெய்சிங் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கு மின் யுவான் கருதுகின்றார்". சீரான மனோ பல கல்வி துறையில் துவக்கப் பள்ளி மாணவர்களின் தன்னம்பிக்கை தன் மதிப்பு, தன் வலிமை ஆகியவற்றை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இயற்கை சமூகம் ஆகியவற்றையும் பிறரையும் தன்னையும் சரியாகக் கையாள்வதில் மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்"என்றார் அவர்.

தற்போது இடைநிலை மற்றும் துவக்க பள்ளி மாணவர்கள் பற்றிய சீரான மனோ பல கல்வி சீனாவின் பல்வேறு இடங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. எடுத்துக்காட்டாக தென் சீனாவின் செச்சியாங் மாநிலத்தின் ஹாங் சோ நகரில் நகர், மாவட்டம், பள்ளி ஆகிய மூன்று தர மனோ பல கல்வி தொடரமைப்பு ஒன்று உருவாகியுள்ளது. நகரில் மனோ பல நிபுணர்கள் இடம் பெறும் ஆலோசகர் குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. மாவட்டத்தில் திஸ்திறிக்ட்டில் சிறப்பு வழிகாட்டல் ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் ஒன்று அல்லது சில தொழில் முறை அல்லது பசுதி நேர மனோ பல ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் இது பற்றிய கல்வி பணிக்கப் பொறுப்பை எடுத்துக் கொள்கின்றனர். ஹாங் சோ நகர கல்வி கமிட்டியின் அதிகாரி சென் யி நொன் கூறினார்.

"இடை நிலை பள்ளி மற்றும் துவக்க பள்ளி மாணவர்களுக்கான மனோ பல கல்வியில் நாங்கள் பெரும் கவனம் செலுத்துகின்றோம். தற்போது இந்நகரில் 3 மனோ பல கல்விக்கான தொலைப் பேசி இணைப்புக்கள் அமைசக்கப்பட்டுள்ளன. மனோ பலம் பற்றி மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கேட்கும் கேள்விகளுக்கு இவை மூலம் பதிலளிக்கலாம். பள்ளிக்குள்ளே மாணவர்களில் மனோ பலம் பற்றிய கல்வியை பொறுத்து வாரத்துக்கு குறைநதது 3 தவணை பாடங்கள் நடத்தப்பட வேண்டும். மேலும் 20 லட்சம் எழுத்துக்களைக் கொண்ட மாணவர் வாசகங்களையும் வெளியிட்டிருக்கின்றோம்"என்றார் அவர்.

தென் சீனாவின் குவான் துங் மாநிலத்தின் வொ சான் நகர 3வது இலக்க இடைநிலை பள்ளி இந்நகரில் புகழ் பெற்ற பள்ளியாகும். இப்பள்ளி மாணவர்களின் மனோ பல கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மாணவர்களுக்கென சிறப்பு ஆரோக்கிய வளர்ச்சி மன்றம் நிறுவப்பட்டுள்ளது. மாணவர் தொடர்பாளர் உள்ளார்கள். மாணவர்கள் மனோ பல பிரச்சினைகளைச் சந்திக்கும் போது இந்த தொடர்பாளரிடம் தெரிவிக்கலாம். தவிர, பல்கலைக்கழகத்தின் தேர்வு நெருஹ்கும் போது மாணவர்களுக்கு எளிதில் தோன்றிய மனோ பல அழுத்தம் குறித்து இப்பள்ளி சீனியர் வகுப்பு மாணவர்களை மனோ பல கல்வியின் முக்கிய இலக்காக எடுத்துக் கொள்கின்றது. ஆண்டுதோறும் பெரிய ரக சொற்பொழிவு நடத்துமாறு ஆண்டுதோறும் நிபுணர்களை வரவழைக்கின்றது. அத்துடன் முன்றாவது ஆண்டு வகுபர்பு மாணவர்களுக்கு ஒரு கடிதம் விநியோகிக்கப்படுகின்றது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கப்படுகின்றது. இது குறித்து கடந்த ஆண்டு கோடைகாலம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இப்பள்ளியின் மாணவர் கோ கூறினார்.
"பல்கலைக் கழகத்துக்கான தேர்வுக்கு முன் பள்ளி எங்களுக்கு நணோ பல கல்வி பாடம் நடத்தியது. எங்களின பதற்றமான மனோ நிலையை தணிப்பதற்கு சிறந்த சூழ் நிலையை உருவாக்கியது. இது எஹ்கள் தேர்வுக்கு பெரும் உதவி வழங்கியுள்ளது"என்றார் அவர். 1 2
|