உலநாடுகள் எதிர்நோக்கும் நீர் பற்றாகுறை

கின் காலநிலை வெப்பம் அடையும் காரணத்தினால், இமய மலையின் பனிவயல் விரைவாக உருகி வருகின்றது. எதிர் வரும் பத்து ஆண்டுகளில், சீனா, இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளின் கோடிக்கணக்கான மக்கள் நீர் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன என்று உலக இயற்கை பாதுகாப்பு நிதியம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியது.
இமய மலை பிரதேசம், வடதுருவத்துக்கு அடுத்த படியாக உலகின் மிக பெரிய பனிவயல் பரப்பாகும். ஆனால் தற்போது, அங்குள்ள
பனிவயல் ஆண்டுக்கு 10 மீட்டர் முதல் 15 மீட்டர் வரையான வேகமுடன் விரைவாக உருகி வருகின்றது. நடவடிக்கை மேற்கொள்ளாவிடில், குறுகிய 20 ஆண்டுகளில், காலநிலையின் மாற்றம் ஒரு அபாய நிலைக்கு மாறிவிடும் என்று ஆய்வு கூறுகின்றது. 2026ஆம் ஆண்டு முதல் 2060ஆம் ஆண்டு வரை, உலகின் சராசரி வெப்ப நிலை 2 திகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.
இமய மலையின் பனிவயல் வேகமாக உருகுவதால்,முதலில், அருகிலுள்ள ஆற்று நீர் மட்டம் உயரும், பெரும் அளவில்வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆனால், பல்லாண்டுகளுக்குப் பின், நிலைமை மாறிவிடும். அப்போது ஆற்று நீரோட்டம் குறையும். மேற்கு சீனா, நேபாளம், வடக்கு இந்தியா ஆகியவற்றின் பொருளாதாத்திற்கும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று உலக இயற்கை பாதுகாப்பு நிதியத்தின் காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வு குழுத் தலைவர் ஜெனிபெர் மோர்கன் கூறினார்.
இமய மலை, கங்கை, சிந்து, யலுசாபு ஆறு, சால்வன் ஆறு, மைகுன் ஆறு, யாங்சி ஆறு, மஞ்சள் ஆறு ஆகிய 7 பெரிய ஆசிய ஆறுகளின் முகத்துவாரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1 2
|