அறிவியல் புள்ளிவிவரங்கள்
மனிதக்குலம் இது வரை 97 விழுக்காட்டு கடற்படுகைகளைத் துருவி ஆராய்ந்துள்ளனர்.

சுழல் காற்றின் வேகம் ஆகக்கூடியது வினாடிக்கு ஆயிரம் மீட்டரை எட்டக் கூடும். 12 நிலை காற்றின் வேகம் விநாடிக்கு 33 மீட்டர் மட்டுமே.
வயதுக்கு வந்தவர் நாளைக்கு சுமார் 20 ஆயிரம் தடவை சுவாசிக்கின்றனர். 0.75 கிலோகிராம் ஆக்சிஜின் உட்கொள்கின்றனர் 0.9 கிலோகிராம் கார்பன் டிஆக்சைட் வெளியேற்றுகின்றனர்.

சிறப்பாக வளரும் ஒரு ஹேக்டர் புல் தரை, நாளைக்கு 600 கிலோகிராம் ஆக்சிஜினை உற்பத்தி செய்ய முடியும். 900 கிலோகிராம் கார்பன் டிஆக்சைடை உட்கொள்ள முடியும்.

பூமியில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் தடவை நில நடுக்கம் ஏற்படுகின்றது. இவற்றில் மிகப் பெரும்பாலானவை மிகவும் சிறியவை. அளவை மானிகள் மூலம் தான் இதைக் கண்டறிய முடியும். ஆனால், ஒரு விழுக்காடு மட்டும் மனித குலத்துக்கு தேசம் ஏற்படும்.

தென் துருவம், பூமியில் மிகப் பெரிய மிக வறட்சியான மிக குளிரான பொட்டல் வெளியாகும். அதன் நிலப்பரப்பு ஒரு கோடியே 50 லட்சம் கிலோமீட்டராகும். இது சஹாரா பாலைவனத்தின் நிலப்பரப்பை விட ஒரு மடங்கு அதிகமாகும்.

சீனாவின் லோயெஸ் பீடபூமி, 4000 ஆண்டுகளுக்கு முன் 48 கோடி மோ காடுகளைக் கொண்டிருந்தது.
1 2
|