• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-31 13:58:53    
சன்சென் நகரில் சுற்றுலா

cri

தென் சீனாவின் கடலோர நகரான சன்சென் நகரம் ஹாங்காங்கை ஒட்டியமைந்துள்ளது. இந்நகரம், சீனாவின் முதலாவது சிறப்புப் பொருளாதார நகரமாகத் திகழ்கின்றது. சுமார் 20 ஆண்டு கால வளர்ச்சியினால், சிறிய மீன் பிடி கிராமமாக இருந்த இந்நிகரில், தற்போது மக்கள் தொகை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதன் பரப்பளவு சுமார் ஈராயிரம் சதுர கிலோமீட்டராகும். இந்நகரம் புதுமை பொலிவுடன் திகழ்கின்றது. இவ்விடத்தில் சுற்றுலா மேற்கொள்ளும் போது, பூங்கா போன்ற நகரின் வசதியையும் அமைதியையும் உணரலாம். தவிர, சில இயற்கை காட்சித் தலங்களுக்கும் சென்று பார்வையிடலாம்.

சீனாவின் இதர பல நகரங்களைப் போல, சன்சென் நகரிலும் உயரமான கட்டடங்களும் குறுக்கும் நெருக்குமான பாதைகளும் உள்ளன. மரங்கள் அதிக அளவில் வளர்கின்றன. பாதைகள் சுத்தமாக உள்ளன. சன்சென் நகரில், ஏராளமான அலுவலகக் கட்டடங்கள் சிறப்பாகக் காட்சியளிக்கின்றன. மக்கள் இக்கட்டடங்களில் வேலை செய்து, பொருள் ஈட்டுகின்றனர். மக்கள் இந்த உயரமான கட்டடங்களுக்கு ஊடாகச் சென்றுவந்து, வாழ்க்கையின் இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்துகொள்கின்றனர். அத்துடன், இந்த உயரமான கட்டடங்களில் ஏறி, நகரக் காட்சியையும் கண்டுகளிக்கலாம். 328 மீட்டர் உயரமுடைய திவான் கட்டடமானது, இந்நகரின் மிக உயரமான கட்டடமாகும். சன்சென் மற்றும் ஹாங்காங்கின் எல்லைப்புறக் காட்சித் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. ஆசியாவின் முதலாவது உயரக் கட்டடக் காட்சித் தலமான சன்சென் ஜன்னல், இக்கட்டடத்தின் மிக உயரமான மாடியில் அமைந்துள்ளது.

சன்சென் ஜன்னல் என்னும் காட்சித் தலத்தில் 15 முக்கிய சுற்றுலா இடங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, மெழுகு உருவச் சிலைக் கூடம், திரைப்படம் காண்பிக்கும் இடம், சீன-பிரிட்டிஷ் வீதி என்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்ட பொருள் விற்பனை வீதி, பயணிகள் ஓய்வு எடுக்கும் இடம், உணவகம், பொழுதுபோக்கு இடம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. 300 மீட்டருக்கு அதிகமான உயரமுடைய கட்டடத்தில் அமர்ந்து காப்பி அருந்திய வண்ணம் கீழே நோக்கி பரபரப்பான சன்சென் நகரத் தெருக்களைக் கண்டுகளிப்பது எவ்வளவோ மகிழ்ச்சி தரும். ஒரே தளர்ச்சி. பணியாளர் சௌசென் கூறியதாவது,

திவான் காட்சித் தலத்துக்கு வருகை தந்த நீங்கள், ஜன்னல் வழியாக சன்சென் நகர மற்றும் சியான்ஜியாங் ஆற்றுக் காட்சியைக் கண்டுகளிக்கலாம். தவிர, பல வேறுபட்டக் காட்சித் தலங்களுக்குச் சென்று காணலாம். கேட்டுமகிழலாம். விளையாடலாம். இதற்குப் பின் இவை உங்கள் உள்ளத்தில் ஆழப்பதிந்திருப்பது உறுதி என நம்புகின்றேன் என்றார் அவர்.

1  2