சீன பெரு நிலப்பகுதியின் கடற்கரை எல்லைக்கோட்டின் நீளம் 18 ஆயிரம் கிலோமீட்டராகும். அழகான கடற்கரைக் குளியல் போட இடங்கள் ஏராளமாக உள்ளன. வட சீனாவுடன் ஒப்பிடும் போது, தென் சீனாவிலுள்ள சன்சென் கடற்கரை குளியலுக்குத் தகுந்த இடமாகும். கோடை காலத்திலும் சரி, குளிர் காலத்திலும் சரி குளிப்பதற்கு வசதியாக உள்ளது. சியௌமெய்சா என்னும் இடம், இந்நகரின் பிரபலமான கடற்கரை குளியல் இடங்களில் ஒன்றாகும்.
சியௌமெய்சா விடுமுறை கிராமம், சன்சென் நகரிலிருந்து கிழக்கில் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தாபெங் வளை குடாவுக்கு அருகில் அமைந்துள்ளது. அதன் மூன்று பக்கங்களையும் மலைகள் சூழ்ந்துள்ளன. இங்கு 4 பருவங்களிலும் நிலப்பரப்பு பசுமையாக உள்ளது. சில கிலோமீட்டர் நீளமான இளம் மஞ்சள் நிறக் கடற்கரை தெற்கிலிருந்து கிழக்காகச் செல்கிறது. குளிர் காலத்திலும் சரி, கோடை காலத்திலும் சரி, வெளிச்சம், கடலலை, கடற்கரை ஆகியவற்றைப் பயணிகள் போதிய அளவில் அனுபவிக்கலாம். நீரில் விளையாடலாம். நீச்சலடிக்கலாம். ரப்பர் படகில் சுற்றுலா செல்லலாம். நீர் சைக்கிளில் சவாரி செய்யலாம்.

சியௌமெய்சா என்னும் இடத்தின் தனிச்சிறப்பு என்ன?ஒன்று, அதன் சுற்றுசூழல் அழகானது. இரண்டு, இதற்கு இசைவான வசதிகள் பல உள்ளன. மூன்று, இவ்விடத்துக்கு வருகை தரும் பயணிகள் விடுமுறை கழிப்பதற்கும் நீச்சலடிப்பதற்கும் பாதுகாப்பானது. நான்கு,நுழைவுச் சீட்டு விலை மலிவு என்றார் அவர்.
சன்சென் வன விலங்குக் காட்சிச்சாலையானது, பயணிகள் இயற்கையை ரசிக்கும் தலை சிறந்த இடமாகும். பரப்பளவு 12 லட்சம் சதுர மீட்டர் ஆகும்.
 
இது, இடை வெப்ப மண்டலப் பூங்கா உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழல் தனிச்சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலமாகும்.
இந்த வன விலங்குக் காட்சிச்சாலையில் சுமார் 300 வகைகளைக் கொண்ட 10 ஆயிரத்துக்கும் அதிகமான விலங்குகள் வளர்கின்றன. அவை புல் தின்னும் விலங்குகளின் காட்சிச்சாலையாகவும், மாமிசம் தின்னும் விலங்குகளின் காட்சிச்சாலையாகவும், சொன்னபடி செயல்படும் விலங்குகளின் காட்சிச்சாலையாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. புல் தின்னும் விலங்குக் காட்சிச்சாலையில் மான், யானை மற்றும் பணிவுள்ள விலங்குகளுடன் பயணிகள் நெருங்கிப் பார்க்கலாம். மாமிசம் தின்னும் விலங்குக் காட்சிச்சாலையும் புல் தின்னும் காட்சிச்சாலையும் உயரமான இரும்புக் கம்பி வேலியால் சூழப்பட்டுள்ளன. பயணிகள், சிறப்பு சுற்றுலா வாகனங்கள் மூலம்தான் இவற்றுக்குள் நுழையலாம். பயணி ஹொ சுன் கூறியதாவது,
இப்போது, மாமிசம் தின்னும் விலங்குக் காட்சிச்சாலைக்குள் நுழைகின்றேன். இங்குள்ள அனைத்து அடக்கப்பட்டவை என்பது தனிச்சிறப்பு என்றார் அவர்.
மாமிசம் தின்னும் விலங்குக் காட்சிச்சாலைக்குள் நுழைந்ததும், சுற்றுலா வாகனம் மிகவும் உறுதியாக இருந்த போதிலும் கூட்டம் கூட்டமாக இருக்கும் புலிகள், ஓநாய்கள், ஆப்பிரிக்க சிங்கங்கள் ஆகியவை, சுற்றுலா வாகனத்தைச் சுற்றிச்செல்வதையும் இவ்விலங்குகளின் கண்களில் நிரம்பிய கொடூரத்தையும் கண்ட பயணிகள் பயப்படுவது இயல்பே.
மாமிசம் தின்னும் விலங்குக் காட்சிச்சாலையிலிருந்து விலகி, நிகழ்ச்சி அரங்கேற்றும் விலங்குக் காட்சிச் சாலைக்குச் சென்று, அங்கு குதிரை மற்றும் ஒட்டகப் பந்தயம், உடல் திறன் விளையாட்டு, விலங்கை வசக்குவது ஆகியவற்றைக் கண்டுகளிக்கலாம். இதன் மூலம், விலங்குகளும் மனிதரும் இசைவாக செயல்படுவது முழுமையாக வெளிப்படுகிறது. 1 2
|